Tag Archives: kushboo

உங்களுக்கு வெக்கமா இல்லையானு என் பிள்ளைகள் கேட்டாங்க… மனம் திறந்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி இயக்குனர்களுக்குதான் அதிக பஞ்சமாக இருந்து வருகிறது. ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படமான முறை மாமன் திரைப்படத்தில் இருந்தே தொடர்ந்து அதிக வெற்றி படங்களையே கொடுத்து வருகிறார்.

காமெடி படங்களுக்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. தற்சமயம் அரண்மனை மாதிரியான பேய் படங்களைதான் அவர் இயக்கி வருகிறார்.

சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடித்தவர் நடிகை குஷ்பு. அப்போதில் இருந்தே குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

sundar c

அதற்கு பிறகு குஷ்புவுக்கு உடல் எடை அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகினார். இந்த நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் குஷ்பு.

அதனை தொடர்ந்து சுந்தர் சியிடம் பழைய குஷ்பு புகைப்படத்தை பார்க்கும்போது மீண்டும் காதல் மலர்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி எனக்கு இப்போதும் குஷ்பு மீது அதே காதல் இருக்கிறது. எங்கள் காதலை பார்த்து எங்கள் பிள்ளைகளே வெக்கமா இல்லையா என கேட்பார்கள் என கூறியுள்ளார் சுந்தர் சி.

வீட்டில் முடங்கி கிடந்த விஷால்.. ஒருமையில் பேசிய குஷ்பு.. இத்தனை விஷயம் நடந்துருக்கு.. விளக்கிய பிரபலம்..!

நடிகர் விஷால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் நடிகராக மாறியுள்ளார். சமீப காலங்களாக விஷாலுக்கு சொல்லி கொள்ளும்ப்படியாக திரைப்படங்கள் என்று எதுவுமே வெளிவரவில்லை. அவர் நடித்த லத்தி திரைப்படம் வரை பெரிதாக வரவேற்பு இல்லாத நடிகராகதான் இருந்து வந்தார் விஷால்.

ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்பை ஏற்படுத்தும் மற்றுமொரு திரைப்படமாக மதகஜராஜா திரைப்படம் அமைந்துள்ளது. மதகஜராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

விஷாலுக்கு இருந்த கை நடுக்கம்:

ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு நடந்த விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் மைக்கை பிடித்து பேசியதை பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் ப்ரோமஷனுக்காக விஷால் வேண்டுமென்றே கையில் நடுக்கம் ஏற்பட்டது போல நடித்துள்ளார் என இதுக்குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார். அவர் கூறும்போது விஷாலுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது என கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான். அவர் சிம்பதி உருவாக்கி அதன் மூலமாக படத்துக்கு ப்ரோமோஷன் தேட பார்த்தார்.

ஆனால் அதுவே அவருக்கு எதிர்வினையாக முடிந்தது. உண்மையில் விஷால் எங்கிருக்கிறார் என்பது பலருக்குமே தெரியாத விஷயமாக இருந்தது. அவர் எங்கோயோ முடங்கி கிடந்தார். அதனால்தான் குஷ்பு மேடையில் பேசும்போது கூட விஷால் உன்னை கண்டுப்பிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருந்தது என ஒருமையில் பேசியிருந்தார். என்று அந்த நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்தார் வலைப்பேச்சு பிஸ்மி.

எட்டு மாச கர்ப்பத்துலயும் விடாம டார்ச்சர் பண்ணுனாறு.. உண்மையை கூறிய நடிகை குஷ்பு..!

ரஜினி கமல் காலகட்டங்களில் நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களாக இருந்தனர். அப்படியான நடிகைகளின் நடிகை குஷ்பூ முக்கியமானவர்.

அதற்கு பிறகு நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார் குஷ்பூ.

அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார் திருமணத்திற்கு பிறகும் கூட அவர் திரைப்படங்களில் நடித்து வந்தார் குஷ்பூ. முறைமாமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருக்கும் சுந்தர்சிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பிறகு அந்த பழக்கமே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சுந்தர் சி யுடன் தனது அனுபவம் குறித்து பேசி இருக்கிறார் குஷ்பூ.

எட்டு மாத கற்பினியாக இருந்த பொழுது படியில் ஏறுவது போன்ற காட்சி ஒன்றை என்னை வைத்து படம் பிடித்தார் சுந்தர்சி. அப்பொழுது அது ஒழுங்காக வரவில்லை என்று திரும்ப திரும்ப அதை படம் ஆக்கினார்கள்.

அப்பொழுது எனக்கு அவர்கள் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது ஒரு கர்ப்பிணி பெண் தன்னுடைய மனைவி என்றும் கூட பாராமல் இப்படி வேலை வாங்குகிறார்கள் என்று இருந்தது என அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் குஷ்பூ.

அந்த விஷயத்துக்காக 400 கோடியை அவர் இழந்தாரு.. நெப்போலியன் சீக்ரெட்டை உடைத்த நடிகை குஷ்பு..

Actor Napoleon is the most famous villain actor in Tamil. His slender figure was perfect for the role of the villain. But in his own life he had to make some difficult decisions for his son.

நடிகர் நெப்போலியன் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய வில்லன் நடிகராக இருந்தவர். அவருக்கென்று ஒரு பெரிய மார்க்கெட்டே அப்பொழுது இருந்தது.

தொடர்ந்து ரஜினி மாதிரியான பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் கூட நெப்போலியன் வில்லனாக நடிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் வில்லன் ஒரு பவர்ஃபுல்லான ஆளாக இருக்கும் பொழுது ஹீரோயின் கதாபாத்திரத்தை இன்னும் மேம்படுத்தி காட்ட முடியும் என்பது இயக்குனர்களின் யோசனையாக இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் நெப்போலியன். அதற்கு அவரது மகன்தான் காரணம் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது தனுஷிற்கு இந்தியாவில் இருப்பதைவிட அமெரிக்காவில் இருப்பதுதான் பிடித்திருந்தது.

nepolean

கடினமான முடிவெடுத்த நெப்போலியன்:

இந்தியாவில் பார்க்கும் மக்கள் அனைவரும் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதாகவும் அமெரிக்காவில் அப்படி யாரும் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார். அதனால் நான் சென்றேன் என்று நெப்போலியன் சாதாரணமாக கூறியுள்ளார்.

ஆனால் அதற்காக அவர் இழந்த விஷயங்கள் குறித்து அவருடன் நெருங்கிய தோழியான குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பல திடுக்கிடும் தகவல்களை கூறுகிறார். தன்னுடைய அரசியல் பதவிகளை எல்லாம் விட்டுவிட்டுதான் நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்றார்.

அதேபோல அந்த சமயத்தில்தான் இந்தியாவில் ஒரு ஐடி நிறுவனத்தை துவங்கி இருந்தார் நெப்போலியன். அந்த ஐடி நிறுவனம் வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் அதை மூடிவிட்டு கிளம்ப வேண்டிய சூழ்நிலை நெப்போலியனுக்கு  ஏற்பட்டது.

அதனால் கிட்டத்தட்ட நெப்போலியனுக்கு 400 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. பலரும் இதற்காக அவரை கேலி செய்தனர் ஐடி துறைக்கு எல்லாம் சினிமா நடிகர் எதற்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்.

ஆனால் இப்பொழுது அமெரிக்கா சென்று மீண்டும் ஐ டி நிறுவனத்தை தான் நடத்தி வருகிறார் நெப்போலியன் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார் குஷ்பூ.

 

குஷ்பு, தமன்னா எல்லாம் செஞ்ச அட்ஜெஸ்ட்மெண்ட்?.. சிக்கிய நடிகை கஸ்தூரி..!

Actress Kasthuri was a popular actress in Tamil cinema at one time. Now she has acted as the heroine along with many famous actors.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இப்போது பிரபல நடிகர்களாக இருந்த பலருடனும் சேர்ந்து கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் இப்பொழுது கஸ்தூரி பேசி வரும் விஷயங்கள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அரசியலில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி தொடர்ந்து சினிமா குறித்தும் மக்கள் குறித்தும் நிறைய விஷயங்களை பேசுகிறார்.

kasthuri

அவையெல்லாம் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியான போது கூட முகுந்த் வரதராஜன் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை. அவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதை படத்தில் காட்டி இருக்க வேண்டும் என்று அவர் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

கஸ்தூரி கிளப்பிய சர்ச்சை:

அதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் பதிலளித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பேசிய இன்னொரு விஷயம் இப்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

thammana

ஒரு பேட்டியில் பேசிய அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்றால் தமன்னா, குஷ்பூ, ஐஸ்வர்யாராய் மாதிரி நானும் பெரிய நடிகையாக மாறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அப்படி என்றால் தமன்னா குஷ்பு எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பெரிய நடிகையானார்கள் என்று கஸ்தூரி கூறுகிறாரா? என்று கேள்வி எழுப்பத் துவங்கி இருக்கின்றனர் இந்த நிலையில் கஸ்தூரி பேசிய அந்த பேட்டி இப்போது பிரபலம் அடைய துவங்கி இருக்கிறது.

கேரவனில் வச்சிக்கலாமா?.. இல்ல வேற எங்கயாச்சும் வச்சிக்கலாமா.. படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் குறித்து பேசிய குஷ்பு..

பாலியல் சர்ச்சை என்பது தொடர்ந்து எல்லா சினிமாக்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகைகள் அதிகமாக பாதிக்கப்படும் ஒரு துறையாக சினிமா இருந்து வருகிறது. அதனாலயே எல்லா காலகட்டங்களிலுமே நடிகைகளுக்கு மதிப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் குறைவாகதான் இருந்து வந்துள்ளது.

இருந்தாலும் கூட யாரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர் ஆனால் சில காலங்களுக்கு முன்பு மீடூ என்கிற ஒரு பிரச்சனை துவங்கிய போது உலக அளவில் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் பேசத் தொடங்கினார்கள்.

தமிழில் கூட பாடகி சின்மயி வைரமுத்துவால் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இது அப்பொழுது அதிக வைரல் ஆகி வந்தது. அதற்குப் பிறகு அது குறித்த பேச்சுக்கள் குறைய தொடங்கின.

ஹேமா கமிட்டி:

இந்த நிலையில் அதன் இரண்டாவது அலையாக தற்சமயம் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பின் அறிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது இந்த அமைப்பு. இந்த நிலையில் ஹேமா கமிட்டி துவங்கி அவர்கள் நடவடிக்கை எடுக்க துவங்கியது முதல் தற்சமயம் பெரிய நடிகர்கள் எல்லாம் அதில் சிக்க துவங்கி இருக்கின்றனர்.

மேலும் இது குறித்து நடிகைகளும் வாய் திறக்க துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் மலையாள சினிமாவில் தனக்கு நடந்த அநீதி குறித்து மற்ற சினிமாவில் இருக்கும் நடிகைகளும் வெளிப்படையாக பேச துவங்கியிருக்கின்றனர்.

நடிகை குஷ்பூ:

அந்த வகையில் நடிகை குஷ்புவும் சில முக்கிய விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் மலையாளத்தில் ஒருமுறை நடித்த பொழுது அவரது கேரவனுக்கே தயாரிப்பாளர் வந்திருக்கிறார். வந்தது மட்டுமல்லாமல் நேரடியாகவே குஷ்புவை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.

அப்போது அவரிடம் பேசிய குஷ்பூ என்னுடைய செருப்பு நம்பர் 9 நான் இங்கு வைத்து உங்களை அடிக்கவா அல்லது படப்பிடிப்பில் வைத்து அடிக்கவா என்று கேட்டிருக்கிறார். அதனால் ஷாக் ஆன தயாரிப்பாளர் அங்கிருந்து சென்று விட்டார் ஆனால் அந்த தைரியம் அனைத்து பெண்களுக்கும் வருவதில்லை என்று கூறுகிறார் குஷ்பூ.

நடிகை எல்லாம் விருப்பப்பட்டுதான அதுக்கு போறாங்க!. குஷ்புவை கடுப்பேத்திய பத்திரிக்கையாளர்..!

சினிமா துறையில் தற்போது பெரும் பேசு பொருளாக இருப்பது நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை தான். விவாதங்கள் வரை சென்றுள்ள இந்த பிரச்சனை தற்போது அனைவரின் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த சில அறிக்கைகள் தமிழ் திரையுலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் குஷ்வுடன் கேள்வி கேட்டதற்கு அவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தமிழ் திரையுலகில் பலராலும் அறியப்படும் நடிகையாவார். சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் தன்னுடைய பயணத்தை தொடங்கிய குஷ்பூ 80களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கை தொடங்கி 90களில் முன்னணி கதாநாயகியாக கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மேடைகளில் பேசுவது சர்ச்சையாகி வரும் நிலையில், சமூகத்தில் நடக்கும் பல வன்முறைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினையை பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதற்கு குஷ்பு கோபப்பட்டு கூறி இருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் கூறிய குஷ்பூ

இந்நிலையில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்புவிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினையை பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். பத்திரிக்கையாளர் “சினிமாவில் நடிகைகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு இவ்வாறு இயக்குனர்களும், நடிகர்களும், பத்திரிகையாளரோ அவரை பாலியல் ரீதியாக அணுகும் போது ஏன் நடிகைகள் மறுப்பு தெரிவிப்பதில்லை என கேள்வி கேட்டார்.”

அதற்கு குஷ்பு எல்லோரும் என்னைப் போல தைரியமாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் இதற்கு பணிந்து தான் செல்கிறார்கள். இதற்கு காரணம் அவரின் குடும்ப சூழ்நிலை எனக் கூறியிருந்தார்.

ஆனால் பத்திரிக்கையாளர் ஒரு நடிகையிடம் மற்ற நபர்கள் பாலியல் ரீதியாக கேட்கும் போது மறுப்பு சொல்வதற்கு என்ன தைரியம் வேண்டும் என கேட்டார். சினிமாவில் சாதிக்க வேண்டும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் சம்பாதிக்க வரும் நடிகைகளுக்கு இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் நடிகைகளுக்கு தொந்தரவு செய்யும் போது நடிகைகள் ஆரம்பத்திலேயே அதை மறுத்தால் அவர்களுக்கு ஏன் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட போகிறது?

ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் இணங்கி செல்வது தான் இவ்வாறான பிரச்சனைகளுக்கு வழிவகிக்கிறது என பத்திரிக்கையாளர் கூறினார்.

ஆனால் குஷ்பு இவ்வாறு நடிகைகள் யாரும் தைரியமாக மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களின் குடும்ப பின்னணியாக இருக்கும். இது போன்ற ஒரு விஷயம் ஒரு நடிகைக்கு நடக்கும் போது அப்போதே அவர் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் மறுப்பு சொல்வதற்கே அங்கு அவருக்கு தைரிய வேண்டும் எனக் கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வீட்டுக்கே வந்து கெஞ்சியும் ஒத்துக்கல!.. விஜய் படத்தால் கடுப்பாகி குஷ்பு எடுத்த முடிவு.. இதுவரை தெரியவே இல்லையே!.

kushboo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரை அவரின் ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைப்பார்கள்.

விஜய் தொடக்க காலத்தில் சினிமாவிற்குள் நுழையும் பொழுது பலரும் இவரை கேலி கிண்டல்கள் செய்தார்கள். இவரெல்லாம் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார் என கூறிவந்தனர்.

ஆனால் தற்பொழுது நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல், நடனத்திலும் நடன இயக்குனர்களுக்கு இணையாக ஆடக்கூடியவர்.

அந்த வகையில் இவருடன் நடிப்பதற்காக பலரும் காத்திருப்பார்கள். தற்போது விஜயுடன் நடித்த முன்னணி நடிகை வாரிசு படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

வாரிசு படத்தில் குஷ்பூ

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான படம் தான் வாரிசு. இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள்.

ஆனால் வாரிசு படத்தில் நடிகை குஷ்பூ நடித்ததை பற்றி ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். அதில் நானும், விஜய்யும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எனக்கு வாரிசு படத்தில் வேறு யாருடனும் காட்சிகள் இல்லை. விஜயுடன் மட்டும் தான் காட்சிகள் இருந்தன.

வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் உள்ள காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளாக எடுக்கப்பட்டது. சொல்லப்போனால் நானும், விஜய்யும் அந்த காட்சியில் உண்மையாகவே அழுதுவிட்டோம். அந்த அளவிற்கு எமோஷனலான காட்சியாக எடுக்கப்பட்டது.

ஸ்டிட்டா சொல்லிவிட்டேன்

ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் நானும் விஜய்யும் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன.

அப்போது இயக்குனர் வம்சி என்னுடைய வீட்டிற்கு வந்து படத்தின் நீளம் அதிகமாக உள்ளதால், உங்கள் காட்சிகளை நீக்க வேண்டியதாக இருக்கிறது என என்னிடம் கூறினார்.

நான் இயக்குனர் வம்சியிடம் ஸ்டெட்டாக சொல்லிவிட்டேன். அப்படி என்றால் என்னுடைய காட்சி ஒன்று கூட படத்தில் இருக்கக் கூடாது எனக் கூறினேன்.

அதற்கு இயக்குனரும் உறுதியளித்தார். ஒரு காட்சிகள் கூட படத்தில் வைக்க மாட்டேன். உங்கள் புகைப்படம் கூட படத்தில் காட்ட மாட்டேன் என கூறினார். ஆனால் நானும் விஜயும் நடித்த காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானதாகவும், அழகாகவும் இருந்தது என குஷ்பு தெரிவித்திருந்தார்.

குஷ்பூ திருமணத்தில் கதறி அழுத கார்த்திக்.. இதுதான் காரணமாம்!..

80 களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவில் இருந்து வந்த குஷ்பூவிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே பெரிதாக வரவேற்புகள் கிடைக்க துவங்கியது.

முக்கியமாக அவர் நடித்த திரைப்படங்களில் சின்னதம்பி திரைப்படம் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அப்போதைய காலகட்டங்களில் இயக்குனர்களை திருமணம் செய்வது என்னும் முறையை நடிகைகள் பின்பற்றி வந்தனர்.

இயக்குனருடன் காதல்:

இயக்குனரை திருமணம் செய்து விட்டால் அதற்கு பிறகு நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பதே பெரிதாக இருக்காது. இந்த நிலையில் குஷ்பூவும் அந்த வகையில் முறைமாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி யை காதலிக்க தொடங்கினார்.

இந்த காதல் வெகுநாட்கள் சென்ற பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் குஷ்பூ இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். குஷ்பு முதன்முதலில் சுந்தர்சியை காதலிக்கும் விஷயத்தை நடிகர் கார்த்தி இடம் தான் கூறினார்.

கதறி அழுத கார்த்திக்:

அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்து வந்தனர் அதேபோல குஷ்பூ மற்றும் சுந்தர் சி திருமணத்திற்கும் முக்கிய விருந்தாளியாக கார்த்தி வந்திருந்தார்.

அப்பொழுது சுந்தர் சியும் குஷ்பூவும் கார்த்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்களாம். அப்பொழுது அதனால் அதிக எமோஷனலான கார்த்திக் கண்ணீர் விட்டு அழுதாராம் இந்த நிகழ்வை குஷ்பூ ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

நாலு ஆண்களுக்கு அதை செஞ்சி இருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை குஷ்பூ..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த நடிகைகளில் குஷ்பூவும் ஒருவர். அப்போது பாலிவுட் சினிமாவில் இருந்த அதிக காம்படிஷன் காரணமாக தமிழ் சினிமாவில் வாழ்க்கை பெறலாம் என்று முயற்சி செய்து தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

குஷ்பூ தர்மத்தின் தலைவன் திரைப்படம் மூலமாக முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் குஷ்பூ. ஆனால் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. தொடர்ந்து வருஷம் 16 திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

குஷ்புவிற்கு வந்த வாய்ப்பு:

தமிழ் சினிமா அப்பொழுது பாலிவுட் சினிமா அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. ஆரம்ப காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவில் நடித்து வந்ததால் அங்கு கொஞ்சம் சொகுசாக இருந்து வந்தார் குஷ்பூ. ஆனால் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில் தமிழ் சினிமா அப்போதுதான் வளர்ந்து வந்து கொண்டிருந்தது உதாரணத்திற்கு பாலிவுட் சினிமாவில் கேரவன் வசதி எல்லாம் அப்பொழுதே இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி எந்த வசதிகளும் கிடையாது. இந்த நிலையில் குஷ்பூ படப்பிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் லைட் மேன் நான்கு பேரை அழைத்து அவர்கள் கையில் புடவையை கொடுத்து குஷ்பூவுடன் அனுப்பி விடுவார்கள்.

ஆரம்பக்கட்ட பிரச்சனைகள்:

அந்த புடவையை சுற்றி பிடித்துக் கொள்வார்கள். இந்த லைட் மேன் நபர்கள் பிறகு குஷ்பூ உடை மாற்றிக் கொள்வார். இது குறித்த அவர் பேட்டியில் கூறும்பொழுது அப்பொழுது வெட்ட வெளியில் நான்கு ஆண்களுக்கு நடுவில் உடை மாற்றும் போது கூட எனக்கு பயம் வந்தது கிடையாது.

kushbu

ஏனெனில் அந்த நால்வரும் என்னை தவறான பார்வையில் பார்த்தது கிடையாது. ஆனால் இப்பொழுது என்றால் கண்டிப்பாக பயப்பட வேண்டும் இப்பொழுது இணையம் கேமரா எல்லாம் வந்துவிட்டது. எனவே இப்பொழுது மாற்ற வேண்டும் என்றால் நான் அதற்காக பயப்படுவேன். ஆனால் அப்பொழுது காருக்குள் சென்று கூட உடையை மாற்றிக் கொண்டு வந்து நடித்திருக்கிறேன் என்று கூறுவர் நடிகை குஷ்பூ.

அன்னிக்கு குஷ்பு கதறி அழுதார்!. அப்படி சொன்னதுக்காக இன்னைக்கு வரைக்கும் வருதப்படுறேன்!.. மனம் உடைந்த சுந்தர் சி!..

தமிழில் வெகு காலங்களாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் காமெடி திரைப்படங்களாக இருந்தாலும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் சீரியஸான திரைப்படங்களாகவும் அமைந்துள்ளன.

அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிகை குஷ்புதான் நடித்திருப்பார். அதற்கு பிறகு நடிகை குஷ்புவையே திருமணம் செய்துக்கொண்டார் சுந்தர் சி. நடிகை குஷ்புவின் பெயரில் பிறகு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சுந்தர் சி துவங்கினார்.

அதன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சினிமாவில் மார்க்கெட் குறைந்த பிறகு அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார் குஷ்பு. இந்த நிலையில் அரசியலில் குஷ்புவிற்கு எதிராக எழும் சர்ச்சைகள் குறித்து சுந்தர் சி பேசியிருந்தார்.

sundar C

அதில் அவர் கூறும்போது தமிழ் பெண்களுக்கு கற்பு கிடையாது என குஷ்பு கூறியதாக ஒரு வீடியோ வலம் வந்தது. அது குஷ்பு கூறியதை ஒட்டி வெட்டி எடிட் செய்த வீடியோ. குஷ்பு அப்படி சொல்லவே இல்லை. எந்த தவறும் அவர் செய்யவில்லை என்பதால் நான் அவருக்கு ஆதரவாக நின்றேன்.

அந்த சமயங்களில் ஜெயலலிதா எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தார். அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடும்படி கூறினார். நானும் இதுக்குறித்து குஷ்புவிடம் பேசினேன். ஆனால் அதை கேட்டு குஷ்பு கதறி அழுதார்.

செய்யாத தவறுக்காக எதற்கு பகீரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. மேலும் நானே மன்னிப்பு கேட்க சொன்னது அவருக்கு மன வருத்தத்தை அளித்தது. அன்று ஏன் குஷ்புவிடம் அப்படி சொன்னோம் என இப்போது வரை வருத்தப்படுகிறேன் என்கிறார் சுந்தர் சி.

மாளவிகாவால் என் குடும்பத்தில் வந்த சண்டை!.. சுந்தர் சிக்கு நடந்த சம்பவம்!..

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கான ஆளாக சுந்தர் சி இருந்து வருகிறார். சுந்தர் சியை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முக்கியமான காமெடி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார் சுந்தர் சி என கூறலாம். அதே சமயம் அவர் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகை மாளவிகாவை தமிழ் சினிமாவிற்கு சுந்தர் சிதான் அறிமுகப்படுத்தினார். அவரை அறிமுகப்படுத்தியதால் குஷ்புவுக்கும் அவருக்கும் இடையே நடந்த சண்டையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சுந்தர் சி.

sundar C

குஷ்புவிற்கு குழந்தை பிறந்தப்போது அவருக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து அவர் தீவிரமாக யோசித்து வந்தார். அந்த சமயங்களில் எல்லாம் இணைய வசதி கிடையாது. எனவே குழந்தை பெயர்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை எடுத்து அதில் பெயர்களை தேர்ந்தெடுத்து வந்தனர். அப்போது குஷ்பு தேர்ந்தெடுத்த பெயர்தான் மாளவிகா.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற சுந்தர் சி ஏதோ ஒரு நியாபகத்தில் மாளவிகாவை அறிமுகம் செய்யும்போது அவருக்கு தனது மனைவி தேர்ந்தெடுத்த பெயரையே வைத்துவிட்டார். அதற்கு முன்பு அந்த நடிகையின் பெயர் ஸ்வேதா கொன்னர் என இருந்தது. இதனால் குஷ்புவுக்கும் தனக்கும் சண்டை வந்துவிட்டதாக பேட்டியில் கூறுகிறார் சுந்தர் சி.