Tag Archives: lokah

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

தமிழிலும் மலையாளத்திலும் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் பிரியதர்ஷன் இவரது மகள்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். அடிப்படையில் ஒரு மலையாள இயக்குனர் என்பதால் பிரியதர்ஷன் தனது மகளை மலையாளத்தில் தான் அறிமுகப்படுத்தினார்.

மலையாளத்தில் தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வந்து கொண்டிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி. தமிழை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மற்றபடி தமிழில் பெரிதாக திரைப்படங்களில் இவர் நடித்தது இல்லை. ஆனால் மலையாளத்தில் இப்பொழுது இவருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் வகையிலான ஒரு கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

லோகா சந்திரா சாப்டர் ஒன் என்கிற இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம். ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வேலைக்காக அவர் நகரத்திற்குள் வருகிறார்.

அந்த வேலையை முடித்த பிறகு அவர் இரவு நேர வேலைக்காக ஒரு இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஒரு நபருடன் கல்யாணி பிரியதர்ஷினிக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷனை அடிப்பதற்காக ஆட்களை அழைத்துக் கொண்டு அவர் வருகிறார். அந்த சமயத்தில் சந்திராவின் சக்தி வெளிபடுகிறது அதனை தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதாக படத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது.

ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்கான அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. மலையாளத்தில் இப்படி ஒரு திரைப்படம் வந்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah – Chapter 1 – Chandra

மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பல பாகங்களாக வர இருக்கிறது. துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படமாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாயாஜால சக்திகளை கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கிறார் என்றும் தெரிகிறது.

படத்தின் டீசர் டிரைலரை பார்க்கும் பொழுது வித்தியாசமான ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் மிக குறைவாகவே வருவதால் இந்த படம் நிச்சயமாக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.