Tag Archives: lubber pandhu

தனுஷுடன் இணையும் சாய்பல்லவி..! அடுத்த படம் குறித்து வந்த அப்டேட்..!

நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷின் தனிப்பட்ட நடிப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கவே செய்கிறது. பொதுவாக ஒருவர் கமர்ஷியல் நடிகராகிவிட்டார் என்றால் தொடர்ந்து சண்டை படங்களில்தான் நடித்து வருவார்.

ஆனால் தனுஷை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அப்படி அவர் நடித்த திருச்சிற்றம்பலம், அசுரன் மாதிரியான படங்கள் எல்லாம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களாக இருந்தன.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் தற்சமயம் இட்லிக்கடை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராயன் திரைப்படம் போலவே இந்த திரைப்படத்தையும் தனுஷே இயக்கி நடிக்கிறார்.

இதற்கு பிறகு லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் அருள்நிதிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்தனர். அந்த படத்திலேயே அவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

எனவே இந்த திரைப்படமும் அவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படுக்கையறை காட்சியில் லப்பர் பந்து நடிகை.. தீயாய் பரவும் வீடியோ.. அடேங்கப்பா.!

Only a few actresses in Tamil cinema are fortunate enough to receive such a huge response through a single film. Actress Suvasika is one of those who became famous.

முன்பை விட தமிழ் சினிமாவில் இப்பொழுது படங்களை பார்க்கும் மக்களின் பார்வை என்பது வெகுவாக மாறி இருக்கிறது. ஏனெனில் முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் மட்டுமே ஒரு நடிகை பெரிதாக பிரபலம் அடைந்து விட முடியாது.

ஆனால் இப்பொழுது ஒரு நடிகைக்கு முதல் படத்திலிருந்தே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் நடிகை சுவாசிகா இதே மாதிரியான விஷயம் மூலமாக தற்சமயம் பிரபலம் அடைய துவங்கியிருக்கிறார்.

லப்பர் பந்து நடிகை:

swasika

இவர் லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் பார்க்கும் பொழுது கொஞ்சம் வயதான கதாபாத்திரமாக இவர் தெரிவார். ஆனால் உண்மையில் அவருக்கு அவ்வளவு வயதெல்லாம் கிடையாது.

கதாநாயகியாக நடிப்பதற்கான வயது தான் அவருக்கு, ஆனாலும் கூட அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தினால் அந்த திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். தமிழில் இவர் கோரிபாளையம், மைதானம், சாட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் லப்பர் பந்து திரைப்படம்தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் இவருடைய பழைய வீடியோ ஒன்று சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிக கவர்ச்சியாக நடித்திருக்கிறார் சுவாசிகா.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை.. கைதாகும் லப்பர் பந்து பட நடிகை.. இப்பதான் ஃபேன்ஸ் வந்தாங்க.. அதுக்குள்ளவா?

கேரள சினிமாவில் தொடர்ந்து இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது இருந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் இது குறித்த சர்ச்சைகள் தீரவில்லை என்று கூறவேண்டும்.

கேரளாவில் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நடந்து வருவதை அடுத்து அரசு அதை கண்காணிக்கும்படி ஹேமா கமிட்டி என்கிற ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிறைய நடிகைகளிடம் வாக்குமூலம் வாங்கி அதன் மூலமாக கேரள சினிமாவில் நடந்து வரும் பாலியல் அத்துமிறல்களை வெளிக்கொண்டு வந்தது.

sanjana

இப்படியாக ஹேமா கமிட்டி கொண்டு வந்த அறிக்கைகளில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் நிறைய நடிகைகள் முன் வந்து தைரியமாக தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து இதில் கூறி இருக்கின்றனர்.

நடிகைக்கு வந்த பிரச்சனை:

ஆனால் பல பிரபலங்கள் இப்படி கூறிய நடிகைகளை கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். அந்த வகையில் லப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கூட மலையாள நடிகைகள் குறித்து தவறான கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இதனால் கோபமடைந்த மலையாள சினிமாவில் இருக்கும் மற்ற நடிகை ஒருவர் இவர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இவருடன் சேர்த்து மேலும் இரண்டு நடிகைகள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இப்பொழுது தான் சஞ்சனாவிற்கு தமிழில் ரசிகர்கள் உருவாக துவங்கினார்கள். ஆனால் இந்த பிரச்சனையின் காரணமாக அவருக்கு இருக்கும் ரசிகர்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.