Tag Archives: Naga Chaitanya

கல்யாண கேசட்டாக வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்.. அடுத்த பிரபலத்திடம் டீலிங்.!

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இந்த வீடியோவிற்கான அக்ரிமெண்டை இரண்டு வருடத்திற்கு முன்பு நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போட்டிருந்தது.

ஆனால் தனுஷ் ஒப்புதல் கொடுக்காத காரணத்தினால் இரண்டு வருடங்களாக இந்த வீடியோ வெளியாவது குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

சமீபத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகி இருந்தது. வெறும் நயன்தாராவின் திருமணம் என்பதை மட்டும் காட்டாமல் நயன்தாராவின் வாழ்க்கையை கூறும் விதத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

நெட்ஃப்ளிக்ஸ் முடிவு:

இந்த நிலையில் இதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காது என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் வெளியான பிறகு இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

naga chaitanya

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து பிரபலங்களின் திருமணத்தை ஆவணப்படமாக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த திருமணத்தையும் நயன்தாரா திருமணத்தை போலவே ஒரு வீடியோவாக செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இதற்காக நாகார்ஜுனா குடும்பத்திடம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

நாக சைதன்யா நிச்சயத்தார்த்தத்துக்கு அவங்க அம்மாவே வரலை.. என்ன மேட்டர் தெரியுமா?

சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நாகார்ஜுனாவின் வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் டேட் செய்து வந்த நிலையில் அவர்களைப் பற்றிய பல கிசுகிசு சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது.

ஆனால் இது பற்றி இருவரும் வாய் திறக்காத நிலையில் தற்பொழுது இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ள புகைப்படத்தை நாக சைதன்யாவின் அப்பா நாகர்ஜுனா அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரு புகைப்படங்கள் மட்டும் வெளிவந்த நிலையில் மற்ற புகைப்படங்களை வெளியிடாததும், மேலும் அவர் நிச்சயதார்த்த விழாவில் அமலா கலந்து கொள்ளாததை பற்றியும் தற்போது சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்

தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ள இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி நெட்டிசன் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோபிதா துலிபாலா இவர் அந்த படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மாடல் அழகியான சோபிதா துலிபாலா பாலிவுட்டில் பல படங்கள் நடித்தும், தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்திருக்கிறார். மேலும் விளம்பர படங்களில் நடித்தும் உள்ளார். .இந்நிலையில் தற்போது சினிமா துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கும் சோபிதா துலிபாலா பிரபல நடிகரான நாக சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

முன்னதாக நாக சைதன்யா நடிகை சமந்தாவை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது இரண்டாவதாக சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய போகிறார்.

நாகர்ஜுனாவின் மனைவி

இந்நிலையில் 1984 ஆம் ஆண்டு லட்சுமியை திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் அகில் அகினேனி.

நடிகை அமலா நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் நிச்சயதார்த்த விழாவில் ஏன் காணப்படவில்லை என்ற தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாகார்ஜுனா இரண்டு புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டுள்ள நிலையில் அமலா தனது சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடவில்லை.

மேலும் இருவரின் நிச்சயதார்த்தத்தில் அவருக்கு விருப்பம் இல்லையா? என ஒருசிலரும், ஒருவேளை அவர் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால் புகைப்படத்தை அவர் பகிரவில்லை என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சிலர் சமந்தாவை அமலாவிற்கு மிகவும் பிடிக்கும். எனவே அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறி வருகிறார்கள். இவ்வாறு பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.