நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் வெப் சீரிஸ்களுக்கு தமிழ் மக்களிடையே வரவேற்பு கூடி வருகிறது. ஏற்கனவே நெட்ப்ளிக்ஸில் வெளியான மணி ஹெயஸ்ட் என்கிற சீரிஸ் தமிழ் மக்களிடையே பிரபலமானது. இதனால் அந்த சீரிஸ் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. அதே போலவே தற்சமயம் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்னும் சீரிஸும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
நெட் ப்ளிக்ஸில் கொரியன் சீரிஸான ஸ்குவிட் கேம் என்கிற சீரிஸ் வெளியானது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அந்த சீரிஸ் தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து அதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ்.
அதிகப்படியான மக்களுக்கு பிடித்த சீரிஸாக இது அமைந்தது. ஸ்குவிட் கேம் என்பது உயிரை பறிக்கும் ஒரு விளையாட்டு ஆகும். அதில் இறுதி வரை உயிரோடு இருப்பவர்கள் கோடி கணக்கான ரூபாய் தொகையை வெல்லலாம்.
இந்த கதை இறுதியில் கதாநாயகன் தப்பித்து பிறகு இந்த கேமிங் அமைப்பிற்கு எதிராக திரும்புவதோடு முடிந்தது.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் , ஸ்குவிட் கேமின் இரண்டாம் பாகம் குறித்து அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ். இதுவரை இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்நிலையில் ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகம் வெளியாகு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ்
இந்தியாவில் உள்ள அதிகப்படியான மக்கள்தொகை காரணமாக ஓ.டி.டி தளங்கள் பலவும் இந்தியாவில் சப்ஸ்க்ரைபர்களை பெறுவதற்கான வேலைகளை பார்த்து வருகின்ற்ன. அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸ், ஜீ 5 என பல ஓடிடி தளங்களும் இதில் போட்டி போட்டு தங்களுக்கான வாடிக்கையாளர்களை பிடித்து வருகின்றன.
சமீபகாலமாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தமிழ் மக்களிடையே பிரபலமாவதற்கு அதிக முயற்சிகளை செய்து வருகிறது. ஸ்குவிட் கேம், ஆல் அஸ் ஆஃப் ஆர் டெத் போன்ற வெப் சீரிஸ்களை தமிழ் மக்களிடையே பிரபலமடைய செய்ய தமிழில் உள்ள பிரபல யூ ட்யூப்பர்களை வைத்து வீடியோ தயார் செய்து வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ்.
மேலும் மணி ஹையஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற சீரிஸ்களை தமிழில் டப்பிங் செய்தும் வெளியிட்டது. இந்நிலையில் நெட்ப்ளிக்ஸின் மிகவும் பிரபலமான தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரை நெட்ப்ளிக்ஸ் தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்த உள்ளது. எனவே ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸின் நான்காம் பாகமானது தமிழில் வர இருக்கிறது.
ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் கதைப்படி ஒரு கிராமத்தில் மர்மமான ஜந்துக்கள் உலா வரும். சில குழந்தைகள் சேர்ந்து அவற்றை எப்படி அழிக்கிறார்கள் என்பதாக கதை செல்லும். அதே கருவை கொண்டு அந்த ஜந்துக்கள் வருவது போலவும் அப்போது இசைஞானி இளையராஜா மியூசிக் போட்டே அவற்றை விரட்டுவது போலவும் வீடியோ தயார் செய்து வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ் வருகிற மே 27 அன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் நான்காவது சீசன் வெளிவர இருக்கிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார்.
முன்னதாக பக்கிரி என்ற படத்தில் நடித்தவர் தற்போது தி க்ரேமேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டெ அர்மாஸ் என ஒரு நடிக பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்,
இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையே அளித்தது. ஏனென்றால் கர்ணனுக்கு பிறகு தனுஷின் எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என ட்ரெய்லருக்காக தீவிரமாக காத்திருந்தனர்.
நேற்று ட்ரெய்லர் வெளியான நிலையில் தனுஷை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2 நிமிடத்திற்கும் மேல் உள்ள படத்தின் ட்ரெய்லரில் தனுஷ் 20 நொடிகள் கூட காட்டப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் மாயி பட “வாம்மா மின்னலு” காமெடியை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். படத்திலாவது அதிக காட்சிகளுக்கு வருவாரா என காத்திருக்கிறார்களாம் ரசிகர்கள்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips