Tag Archives: news

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

நகை கடை விளம்பரத்துக்கு அழைத்து சென்று நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விஷயம் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிக பேச்சு பொருளாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெகு  காலங்களாகவே இந்த நடிகை டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார்.

ஆனாலும் கூட இப்போது இவருக்கு  இப்போது பட வாய்ப்புகள் குறைவாகதான் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடை திறப்பு விழா மாதிரியான விஷயங்களை செய்து வருகிறார். அப்படியாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நிகழ்வை சமீபத்தில் இவர் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது கடை திறப்பு விழாவிற்கு முதல் நாள் எனக்கு அறை போட்டிருப்பதாக அந்த ஹோட்டல் மேலாளர் கூறினார். மறுநாள் காலையிலேயே கடை திறப்பு விழா என்பதால் நானும் முதல் நாளே அங்கு சென்று தங்கினேன்.

அப்போது எனக்கு போன் செய்த மேனாஜர் உங்களுக்கு எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா? என கேட்டார். நான் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என கூறினேன். பிறகு அவர் என்னிடம் ஹோட்டல் உரிமையாளர் உங்களை பார்க்க வரவேண்டும் என கூறினார் என்றார்.

நாளை விழாவில் பார்த்துக்கொள்ளலாம் எதற்கு இப்போது பார்க்க வருகிறார் என நான் கேட்டேன். அவர் உங்களது ரசிகர் உங்களுக்காக பரிசு வாங்கி வருகிறார் என்று மேலாளர் கூறினார். பிறகு அந்த முதலாளி வந்த பிறகுதான் அவர்கள் நோக்கம் என்னவென்று புரிந்தது. பிறகு எனக்கு இதில் விருப்பமில்லை என அந்த நபரை அனுப்பிவிட்டேன்.

இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் விடிந்ததுமே அந்த அறையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார் நடிகை.

படுக்கையில் அதிகம் அதை விரும்பும் தம்பதிகள்.. இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்.!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதுமே இறப்புகளின் விகிதம் என்பது கணிசமாக குறைய துவங்கியது.

இதனால் பல நாடுகளில் மக்கள் தொகை சில ஆண்டுகளிலேயே அதிகரித்தது. அப்படியாக இந்தியாவிலும் அதிகரித்தது. உறவுகளுக்கு இடையே அதிக விதிமுறைகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் என்னதான் பலரும் தாம்பத்திய உறவில் இருந்தாலும் அவர்களுக்கு தங்கள் இணையுடன் சேர்ந்து உறங்குவதில் விருப்பம் இல்லையாம்.

சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் 78 சதவீதம் மக்கள் தனிமையில் உறங்கவே விருப்பப்படுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வுகளின்படி தென் கொரியாவில் 65 சதவீத மக்களும், சீனாவில் 67 சதவீத மக்களும், இந்தியாவில் 78 சதவீத மக்களும் ,அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 50 சதவீத மக்களும் தனிமையில் உறங்குவதை விரும்புகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகே இந்த விகிதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படி தனிமையில் உறங்குவதற்கு குறட்டை போன்ற பல்வேறு விஷயங்களும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் இது கணவன் மனைவிக்கு இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என கூறப்படுகிறது.

வீடியோ கால் பேசும் காதலர்களை குலைநடுங்க வைத்த சம்பவம் – தெரியாம கூட இத செஞ்சிடாதீங்க

இணையதளம் என்பது வர வர பலருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சின்ன பிள்ளைகளில் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மோசடிகள் மூலமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏதாவது ஒரு மோசடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இப்பொழுது அவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதை சரி செய்வதற்கு மக்கள் விழிப்புணர்வாக இருப்பது மட்டுமே ஒரே வழி என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று படித்து வந்த ஒரு பெண்ணுக்கு நடந்த நிகழ்வு சமீபத்தில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கத்தில் இருந்திருக்கிறார்.

பெண்ணுக்கு நடந்த சோகம்:

இந்த இளைஞர் தொடர்ந்து சாட் மூலமாக பேசி வந்தவர் பிறகு கால் செய்து பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் வீடியோ காலில் வருமாறு அழைத்திருக்கிறார் வீடியோ காலில் நிர்வாண வீடியோ கால் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார்.

அந்த பெண் அதற்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் கத்தியை எடுத்து கையை அறுத்துக் கொள்வேன் என்று கூறி மிரட்டி இருக்கிறார் இதனால் பயந்து போன அந்த பெண் இரண்டு முறை அவருக்கு நிர்வாண வீடியோ கால் செய்திருக்கிறது.

இந்த நிலையில் அந்த வீடியோ காலை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்ட அந்த இளைஞர் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பணம் பறிக்க துவங்கியிருக்கிறார். இப்படி மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை இவர் வாங்கி இருக்கிறார். பிறகு அதுவும் பத்தவில்லை என்று மீண்டும் ஒரு 50 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இந்த தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் காவல்துறையிடம் சென்று புகார் அளித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தற்சமயம் போலீசார் இது குறித்த விசாரணையை துவங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான ஆன்லைன் விஷயங்களை பொறுத்தவரை பெண்கள் இன்னமும் உஷாராக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.