Tag Archives: parasakthi movie

பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்.. பேன் இந்தியா படமா வருதோ?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்பொழுது எல்லாம் பெரிதாக இவர் காமெடி கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி.

இந்த திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருவதாக தற்சமயம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன..

மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுக்கு கேமியோ கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனோடு சேர்ந்து மலையாளத்தில் பிரபல நடிகரான பாசில் ஜோசப் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் ரானா டகுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்த அதே சமயத்தில் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களிலும் நடந்தது.

அந்த சமயங்களில் அங்கு போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய போராட்ட வீரர்களாக பாசில் ஜோசப்பும் ராணா டகுபதியும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.