பாலிவுட் சினிமாவில் உச்ச பட்ச நடிகையாக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
தமிழில் இவர் விஜய்யுடன் சேர்ந்து தமிழன் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் க்ரிஸ் மாதிரியான டப்பிங் திரைப்படங்கள் மூலமாக பிரியங்கா சோப்ராவை தமிழ் ரசிகர்கள் பலருக்குமே தெரியும் என்று கூறலாம்.
இந்த நிலையில் ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைத்த பிறகு தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.
இப்பொழுது பெரிதாக ஹிந்தி சினிமாவில் கூட இவரை பார்க்க முடியவில்லை இந்த நிலையில் சமீபத்தில் பிகினி ஆடையில் தன்னுடைய கணவருடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.
இந்திய நடிகைகளில் முதன் முதலாக பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்கா சோப்ரா விடாப்படியான தன்னம்பிக்கை கொண்டவர் என பலராலும் அழைக்கப்பட்டவர். அவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறுகிறார்.
2011 ஆம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அதை பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது.
அதே சமயம் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் ப்ரியங்கா சோப்ராவிற்கு ஒரு படத்திற்காக விருது வழங்க இருந்தது. இரண்டு நிகழ்வுகளும் ஒரு நாள் வித்தியாசத்தில் நடைப்பெற்றன. இரண்டிற்குமே ப்ரியங்கா சோப்ரா போய் ஆக வேண்டும். ஆனால் இரண்டு நாடுகளும் வெகு தூரத்தில் இருந்தன.
உடனே ப்ரியங்கா சோப்ரா ஒரு முடிவு செய்தார். விமான பயணம் மூலம் இதை செயல்படுத்த முடிவெடுத்தார். மூன்றே நாள் தொடர்ந்து ஓய்வில்லாமல் பயணம் செய்து இரு நாடுகளிலும் நடந்த நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டார் ப்ரியங்கா சோப்ரா.
இப்படியாக எப்போதும் சினிமாவில் அவருக்கு வரும் சவாலான விஷயங்களை எதிர்க்கொண்டது மூலமே அவர் வளர்ச்சி அடைய முடிந்தது என அவர் கூறியிருந்தார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips