Tag Archives: rathan tata

ரத்தன் டாடாவுக்கு ஸ்கெட்ச் போட்ட ரவுடி.. பதிலுக்கு டாடா செய்த காரியம்தான் தெறி..

இந்தியாவில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. பொதுமக்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவர் என்கிற காரணத்தினாலேயே அதிகமாக கொண்டாடப்படும் ஒரு தொழிலதிபராக இவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் எல்லா தொழிலதிபர்களும் தொழில் சார்ந்து நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படியாக ஒரு ரவுடியிடம் டாடாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவரே ஒருமுறை பேசி இருக்கிறார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த பொழுது அந்த நிறுவனத்தை மூடச் சொல்லி ஒரு பெரிய ரவுடியிடம் இருந்து எச்சரிக்கை வந்தது. ஆனால் நான் அதை செய்யவில்லை நான் போலீஸிடம் இது குறித்து கூறினேன்.

டாடா செய்த வேலை:

ஆனால் போலீஸ் எடுத்த உடனே இதற்கு பெரிதாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் எனது ஊழியர்கள் சிலரை அந்த ரவுடிகள் தாக்கினர். இதனால் அவர்கள் வேலைக்கு வருவதற்கு பயந்தனர்.

பிறகு அவர்களை எல்லாம் அழைத்து நான் அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தேன் பிறகு சில நாட்களிலேயே அந்த ரவுடி கைது செய்யப்பட்டான் அதற்குப் பிறகு வெளிவந்தவுடன் அவன் நிறைய முறை என்னை கொல்வதற்கு முயற்சி செய்தான். ஆனால் நான் விட்டுக் கொடுக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார் ரத்தன் டாடா.

டாடாவிடம் இருந்து வந்த மிஸ்ட் கால்.. நாய்க்காக பிரிட்டிஷ் அரசு குடும்பத்தையே நிராகரித்த ரத்தன் டாடா..!

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா அவரை குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ரத்தன் டாடா சிறுவயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். முக்கியமாக நாய்கள் மீது அவருக்கு அதிக பாசம் உண்டு சிறுவயதிலிருந்தே நாய் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவார் ரத்தன் டாடா.

எப்போதுமே ஓய்வு நாட்களில் தனது நாய்களுடன்தான் கழித்து வருவார் கிட்டத்தட்ட அவரது குடும்ப உறுப்பினர்களாக தான் அவரது நாய்கள் இருந்து வந்தன. முக்கியமாக ஆரம்பத்தில் ரத்தன் டாடா எந்த வளர்ப்பு நாயையும் வளர்க்கவில்லை.

rathan tata

ரத்தன் டாடாவிற்கு கிடைத்த மரியாதை:

தெரு நாய்களைதான் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்லஸ் ஒருமுறை ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தினார். அதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்த சார்லஸ் அதற்கு சிறப்பு விருந்தினராக ரத்தன் டாடாவை அழைத்து இருந்தார்.

இதற்காக லண்டன் செல்ல ஆயத்தமாக இருந்த ரத்தன் டாடா பிறகு அந்த பயணத்தை கேன்சல் செய்து விட்டார். இது தெரியாமல் அவரது மேலாளர் ஏற்கனவே லண்டனுக்கு சென்றிருந்தார். லண்டனுக்கு சென்ற பிறகு அவரது போனை எடுத்து பார்த்தபொழுது பதினோருமுறை ரத்தன் டாடா அவருக்கு போன் செய்திருந்தது தெரிந்தது.

என்னவென்று போன் செய்து கேட்கும் பொழுது அவர் ஆசையாக வளர்த்த நாய் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அதனால் லண்டனுக்கு வர முடியாது என்றும் கூறிவிட்டார் இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இளவரசர் சார்லஸ் இதற்காகவே டாடாவை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நாய்கள் மீது ரத்தன் டாடாவிற்கு இருந்த பேரன்பு.. யாருமே செய்யாத அந்த விஷயத்தை செய்தார்.. ஸ்டார் ஹோட்டல் ஊழியரே அதிர்ந்த நிகழ்வு..!

சிறுவயது முதலே நாய்களின் மீது பேரன்பு கொண்டவர் ரத்தன் டாடா. பல நாய்களை இவர் வளர்த்திருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே அவர் தெரு நாய்களை கூட எடுத்து வளர்த்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு அமைதி கொடுக்கும் ஒரு விஷயம் என்றால் அது நாய்தான்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை கொடுக்கக் கூடிய ஒரு உயிரினமாக நாய் இருப்பதால் தொடர்ந்து நாய் விரும்பியாக இருந்து வந்தார்.

rathan tata

ரத்தன் டாடா

தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டுமின்றி மொத்தமாகவே அவருக்கு நாய் மீது அதிக அன்பு இருந்தது. இதனால் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களையும் உணவகங்களையும் டாடா கட்டிய போதும் கூட அங்கு உள்ள ரிஷப்ஷனுக்கு வெளியில் நிற்கும் ஊழியர்களுக்கு அவர் ஒரு உத்தரவு போட்டு இருந்தார்.

அதாவது ஹோட்டல் வாசலில் வந்து தெரு நாய் ஏதாவது நின்றால் அதை அடித்து விரட்ட கூடாது. அதேபோல உண்மையிலேயே சிகப்பு கார்ப்பரேட் போடப்பட்ட ஒரு ஹோட்டலின் வாசலில் நாய் நின்று இருந்தும் அதை ஊழியர்கள் விரட்டாத வீடியோ எடுத்து ஒரு நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருந்தார் அது அதிக வைரலானது தற்சமயம் மீண்டும் அந்த வீடியோ வைரலாக துவங்கி இருக்கிறது.

86 வயது ரத்தன் டாடாவுக்கு இருந்த இளம் வயது நண்பர்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் இந்தியாவில் உள்ள முக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. தனது வாழ்நாள் முழுக்க தன்னுடைய தொழில்துறை வளர்ச்சி சார்பாக அதிகமாக பணியாற்றி வந்தார்.

ஆனாலும் கூட அதே சமயம் மக்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். 86 வயதில் தற்சமயம் உயிர் இழந்து இருக்கும் ரத்தன் டாடாவிற்கு ஒரு நண்பர் உண்டு.

ரத்தன் டாடாவின் நண்பர்:

சாந்தனு என்கிற அந்த இளைஞர் ரத்தன் டாடாவிற்கு மிக முக்கியமானவர். 29 வயதான சாந்தனுவுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையே அப்படி என்ன உறவு என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம்.

ரத்தன் டாடாவின் மிக நெருங்கிய நண்பராக ரோஷன் இருந்துள்ளார். ரோஷன் ரத்தன் டாடாவின் பி.ஏ ஆவார். இதனால் தொடர்ந்து அவரை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டுள்ளார் ரோஷன். மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செய்யும் தொழில் சார்ந்த விஷயங்களை கையாள்வதற்கு சாந்தனு அதிக உதவியாக இருந்திருக்கிறார்.

இப்போதைய தலைமுறையினர் மத்தியில் என்ன பிரபலமாக இருக்கிறது என்பதை டாடா அறிந்து கொள்வதற்கும் இவர் உதவியாக இருந்துள்ளார் இதையெல்லாம் தாண்டி அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.

இறக்கும் முன்பு டாடா சொன்ன அந்த வார்த்தைகள்.. காலத்துக்கும் நின்னு பேசும்..!

இந்தியாவில் உள்ள முக்கிய பணக்காரர்களில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. இளம் வயதிலிருந்து தனது டாட்டா குழுமத்தை வளர்த்து வரும் ரத்தன் டாடா இன்று உயிரிழந்திருப்பது பலருக்கும் பெரிய இழப்பாக இருக்கிறது

ஏனெனில் மற்ற தொழிலதிபர்கள் போல வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றும் தொழிலதிபராக இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்தவராக இருந்து வருகிறார் ரத்தன் டாடா.

முக்கியமாக கொரோனா சமயத்தில் கூட நிதி உதவி கேட்ட பொழுது அரசுக்கு 1500 கோடியை நிதி உதவியாக கொடுத்தார். அதேபோல ஒவ்வொரு குடிமகன் வீட்டிலும் ஒரு கார் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

rathan tata

ரத்தன் டாடாவின் வரிகள்:

எப்படி பில்கேட்ஸ் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி இருக்க வேண்டும் ஆசைப்பட்டாரோ அதேபோலதான் ரத்தன் டாடாவின் ஆசையும் இருந்தது இதற்காகவே ஒரு லட்ச ரூபாயில் டாடா நானோ என்கிற காரை அறிமுகப்படுத்தினார் ரத்தன் டாடா.

தற்சமயம் மறைந்து இருந்தாலும் கூட அவருடைய ஒரு வசனம் எப்பொழுதும் நின்று பேசும் வசனமாக இருக்கிறது அது என்னவென்றால் யாராலும் இரும்பை அழிக்க முடியாது ஆனால் அதன் சொந்த துருப்பிடிப்பதால் மட்டுமே அது அழியும். அதேபோல யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது அவருடைய சொந்த மனநிலையால் மட்டுமே அது முடியும்.

நம்முடைய தன்னம்பிக்கை தான் நம்மை வளர்த்து விடும் அது போய்விட்டால் நாம் அழிந்து விடுவோம் என்பதை கூறும் விதமாக ரத்தன் டாடா கூறியிருக்கும் இந்த வசனங்கள் இப்பொழுது வைரலாக துவங்கியிருக்கின்றன.