Tag Archives: seran

தமிழ் சினிமாவில் அந்த சமயத்தில் போதை புடிச்சி திருஞ்சேன்.. சேரன் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர்..!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய பிறகு நடிகராக மாறியவர் நடிகர் சேரன். சேரனை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து இயக்குவார்.

அவர் இயக்கிய படங்கள் எல்லாமே அந்த மாதிரியான திரைப்படங்கள் தான் அதற்குப் பிறகு அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்ல மறந்த கதை திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார் சேரன்.

அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் அவர் நடிகராக நடித்திருக்கிறார் மேலும் ஆட்டோகிராப் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சேரன் கூறும் பொழுது ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிகராக வேண்டும் என்று தான் நான் வந்தேன்.

ஆனால் இயக்குனர்களை பார்த்த பிறகு எனது எண்ணம் மாறிவிட்டது இயக்குனர்தான் 100 பேரை கட்டி ஆளும் ஒரு சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகன் யார் என்றால் அது இயக்குனர் தான் எனவே இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இயக்குனர் ஆன பிறகு தொடர்ந்து ஏழு திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக கொடுத்தேன்.

அது எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது எனவே நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகுதான் இயக்குனர் தங்கர்பச்சான் என்னிடம் சொல்ல மறந்த கதை திரைப்படத்தின் கதையை கூறினார். எனக்கு அப்பொழுதும் கதாநாயகனாக நடிக்க ஆசை இல்லை.

ஆனால் அந்த படத்தின் கதை என்னை வெகுவாக பாதித்தது அதனால் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் சேரன்.

விஜய் சேதுபதியோட படம் பண்ண முடியாது.. மறைமுகமாக தாக்கி பேசிய இயக்குனர் சேரன்.!

தமிழில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த விடுதலை 2 மற்றும் மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெகுவாக பேசப்பட்டது.

மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஓ.டி.டி மூலமாக உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் சேதுபதி இன்னமும் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவரிடம் நீங்களும் விஜய் சேதுபதியும் சேர்ந்து படம் பண்ணுவதாக இருந்தது அது என்ன ஆயிற்று என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த சேரன் அதற்கெல்லாம் இப்பொழுது வாய்ப்புகள் இல்லை நிறைய மாறிவிட்டது. உள்ளுக்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. விஜய் சேதுபதி மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்.

அவரிடம் வாய்ப்பு வாங்குவது கடினம் இன்னும் பத்து வருடத்திற்கு அவரிடம் வாய்ப்பே வாங்க முடியாது என்று விஜய் சேதுபதியை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் சேரன். இதன் மூலமாக இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தனுஷ் இல்லன்னா சிம்பு நடிச்சிருந்தா நல்லா வந்திருக்க வேண்டிய படம்!. மனம் கலங்கிய சேரன்!.

Dhanush and Simbu : இயக்குனர் பாக்யராஜிற்கு பிறகு குடும்ப அடியன்ஸுக்கு அதிகமாக பிடித்த ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் சேரன்தான் பாக்யராஜிற்கும் சேரனுக்கும் நிறைய ஒற்றுமைகளும் உண்டு. பாக்கியராஜ் எப்படி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை இயக்கி அதில் அவர் கதாநாயகனாக நடித்து பிரபலமானாரோ அதே விஷயத்தைதான் சேரனும் செய்தார்.

சேரன் இயக்கிய திரைப்படங்கள் குடும்பங்கள் பார்க்கும் படங்களாக இருந்தன. அதேபோல குடும்பங்கள் கொண்டாடும் மற்ற இயக்குனர்கள் திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் சேரன். அப்படி அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் அப்போது வெகுவாக பிரபலமாக இருந்தன.

ஆட்டோகிராப் திரைப்படத்திற்கு பிறகு சேரனின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற துவங்கின. அதனை தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களை இயக்கினார். அதில் ஒரு திரைப்படம்தான் மாயக்கண்ணாடி.

மாயக்கண்ணாடி திரைப்படத்தைப் பொறுத்தவரை வழக்கமாக நடிப்பது போன்ற குடும்ப கதாபாத்திரமாக இதில் நடிக்காமல் சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை.

படம் தோல்வியடைய இதுதான் காரணம்:

அது குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது நான் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதை எழுதும் பொழுதும் அதில் வேறு நடிகர்களைதான் நடிக்க வைக்க பார்ப்பேன். ஆனால் அவர்கள் யாரிடமும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இறுதியில் நானே அதில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

mayakannadi

மாயக்கண்ணாடி திரைப்படத்தைப் பொறுத்த வரையில் சிம்பு அல்லது தனுசை தான் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருவேளை அவர்களில் யாராவது ஒருவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கும்.

ஆனால் நான் நடித்தது அவ்வளவாக மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் அந்த திரைப்படம் தோல்வியை கண்டது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் சேரன்.

ஒண்ணுமே சொல்லாமல் அந்த படத்தில் இருந்து சேரன் என்னை தூக்கிட்டாரு!.. மனம் வருந்திய பசங்க இயக்குனர்…

வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிப்பதை விட உள்ளூரிலேயே பெரிதாக சம்பாதித்து முன்னேற முடியும் என்பதை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் வெற்றி கொடி கட்டு.

இயக்குனர் சேரனால் இயக்கப்பட்ட வெற்றி கொடிக்கட்டு திரைப்படம் அப்போது வந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஆகும். இப்போது வரை கிராமத்து இளைஞர்களுக்கு வெளிநாடு சென்றால்தான் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரு எண்ணம் உண்டு.

ஆனால் அந்த எண்ணத்தை உடைத்து என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்னும் வசனத்திற்கு ஏற்ப இங்கேயே பிழைக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் சேரன் எழுதிய கதைதான் வெற்றி கொடிக்கட்டு.

வெற்றி கொடிக்கட்டு படம் திரைப்படம் ஆக்கப்படும் போது அதில் மொத்தம் ஏழு பேர் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர். அதில் சிம்பு தேவனும் இயக்குனர் பாண்டியராஜும் இருந்தனர். ஆனால் படத்திலிருந்து இரண்டு உதவி இயக்குனர்களை நீக்க வேண்டி இருந்ததால் அப்பொழுது சேரன் பாண்டியராஜையும் சிம்பு தேவனையும் நீக்கிவிட்டார்.

ஆனால் இவர்கள் இருவரும் அதற்கு முன்பே தங்களது குடும்பத்தாரிடம் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகிவிட்டதாக கூறி பெருமைப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மனமுடைந்த பாண்டியராஜ் தனது குடும்பத்தை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றிருந்தார்.

இந்த நேரத்தில் இருந்த ஐந்து உதவி இயக்குனர்களில் ஒருவர் அவராகவே படத்தில் இருந்து நீங்கி விட்டதால் அதற்கு பதிலாக சிம்பு தேவனை சேர்த்துக் கொண்டனர். இறுதியாக பட வாய்ப்பு கிடைக்காமல் தனியாக நின்றார் பாண்டியராஜ். இது குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது படத்தில் பெயர் போடும்போது அதில் உதவி இயக்குனர்கள் பெயரில் எனது பெயர் இல்லாததை பார்க்கும்பொழுது முகுந்த வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார் பாண்டிராஜ்.

ராஜ்கிரண் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் எழுதிய பாடல்!.. கண் கலங்கிய ராஜ்கிரண்!.. எந்த பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து பிறகு இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக என அனைத்து துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் ராஜ்கிரண்.  உழைக்கும் வர்க்கத்தில் உடல் அமைப்போடு கிராமத்து பாஷையோடு சினிமாவிற்கு வந்ததால் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக பாமர மக்கள் அவரை ஒரு கதாநாயகனாக கொண்டாட தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தார் ராஜ்கிரண். அதில் சில திரைப்படங்கள் அவரே தயாரித்தவை. அரண்மனைக்கிளி திரைப்படத்தைப் பொறுத்தவரை அவரே இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் ஆகும். அந்த திரைப்படம் கொடுத்த வெற்றிதான் முக்கியமாக ராஜ்கிரனுக்கு தமிழ் சினிமாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜ்கிரன் கதாநாயகனாக நடித்த படங்களை விடவும் அப்பாவாக நடித்த திரைப்படங்கள் தான் தற்கால தலைமுறையினருக்கு ராஜ்கிரனை அறிமுகப்படுத்திய திரைப்படங்கள் என கூறலாம். இந்த நிலையில் அவர் நடித்த திரைப்படத்தில் முக்கியமான திரைப்படம் தவமாய் தவமிருந்து.

பார்ப்பதற்கு சேரனின் வாழ்க்கையை கூறுவது போன்ற படமாக தெரிந்தாலும் உண்மையில் அந்த படத்தின் கதாநாயகன் ராஜ்கிரண்தான் ராஜ்கிரணின் இளமை காலங்களில் துவங்கி அவரின் இறப்பு வரையில் உள்ள கதையை பேசும் படம்தான் தவமாய் தவமிருந்து.

அதில் ஒரே ஒரு ஊருக்குள்ள என்கிற ஒரு பாடல் மிகப் பிரபலமான பாட்டாகும். அந்த பாடலில் வரும் வரிகள் ராஜ்கிரணின் வாழ்க்கையை குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டிருந்தன. ராஜ்கிரண் சிறுவயதில் இருந்து இளமை காலங்கள் வரையிலும் தனது தாயால்தான் வளர்க்கப்பட்டார்.

அப்படி வளர்க்கப்படும் பொழுது கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத வகையில் வளர்க்கப்பட்ட ராஜ்கிரண் முதன்முதலாக சென்னைக்கு வேலை தேடி வரும் பொழுதுதான் தான் ஏழை என்பதும் கஷ்டம் என்றால் என்ன என்பதையும் ராஜ்கிரண் அறிந்தார்.

அதை விளக்கும் வகையில் ஒரே ஒரு ஊருக்குள்ள என்கிற அந்தப் பாடலில் “செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை தெரியவில்லை” என பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடல் வரிகளை முதல் முறை கேட்ட பொழுது ராஜ்கிரண் அழுதுவிட்டார் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு அவரது உண்மை வாழ்க்கையை விளக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன.

மேல ஜாகெட் கூட கிடையாது!.. பொது இடத்துலையே புடவை மாற்றிய மீனா!.. சேரன் படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமா நடிகைகளில் சிறுவயது முதல் சினிமாவில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை மீனா. சிறுவயதில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படமே அப்போது பெரிதாக வரவேற்பை பெற்றது. மேலும் பள்ளிப்பருவத்திலேயே ராஜ்கிரனுடன் இணைந்து என் ராசாவின் மனசிலே என்றா திரைப்படத்தில் நடித்திருந்தார் மீனா.

மீனா எந்த ஒரு படத்திலும் நடிக்கும் போதும் முழு ஆர்வத்துடன் நடிப்பார் எவ்வளவு தடங்கல் வந்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க கூடியவர் மீனா என்று பல நடிகர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். சேரன் இயக்கிய பொற்காலம் திரைப்படத்தில் மீனா கதாநாயகியாக நடித்த போது நடந்த நிகழ்வு ஒன்றை பேட்டியில் பகிர்ந்து இருந்தார் சேரன்.

அதாவது பொற்காலம் படத்தில் முரளிதான் கதாநாயகனாக நடித்தார். அதில் ஒரு காட்சியில் மீனாவின் புடவையில் முள் குத்திக் கொள்ளும் காட்சி ஒன்று இருந்தது. அதை படமாக்க வரும் பொழுது மீனா மஞ்சள் புடவை கட்டி இருந்தார்.

ஆனால் அந்த காட்சியில் பச்சை புடவைதான் கட்டி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் புடவை மாற்றுவதற்கு அங்கு பக்கத்தில் ஏதும் வீடுகள் கூட கிடையாது. அப்பொழுதெல்லாம் கேரவான் வசதியும் கிடையாது கதாநாயகர்கள் கதாநாயகர்களுக்கு ஓய்வெடுக்க கேரவான் வண்டியெல்லாம் இப்போதுதான் வந்தது.

இந்த நிலையில் மீனா நான்கு பேரை துணியை வைத்து மறைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நடுவில் நின்று புடவையை மாற்றியுள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த கதைப்படி மீனா ஜாக்கெட் கூட போட்டிருக்க மாட்டார். இருந்தாலும் அவர் படத்திற்காக வேகமாக புடவையை மாற்றி கொண்டு வந்து நடித்தார் என்று சேரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி அதை எனக்காக செஞ்சாங்க மீனா!.. வெளிப்படையாக கூறிய சேரன்!..

தமிழில் குடும்ப திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் நடிகரும் இயக்குனருமான சேரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. நடிகராகவும் இயக்குனராகவும் தமிழில் நிறைய திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறார் சேரன்.

அதில் தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் போன்ற அவரது திரைப்படங்கள் பிரபலமானவை, சேரன் இயக்கிய மற்றொரு அழகிய திரைப்படம் பொக்கிஷம். கடிதங்களை வைத்து காதலை சொல்லும் அந்த திரைப்படம். அது வந்த காலகட்டத்தில் வெகுவாக பேசப்பட்டது.

கிட்டத்தட்ட இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமலே கடிதம் வழியாக காதலித்துக் கொண்டிருப்பார்கள். அந்த கடிதத்தை பொக்கிஷம் என்று கூறிதான் படத்திற்கும் பொக்கிஷம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணிற்கு அவ்வளவாக தமிழ் சரியாக வரவில்லை.

எனவே அழகிய தமிழ் பேசும் ஒரு பெண் கண்டிப்பாக இந்த படத்திற்கு டப்பிங் செய்தாக வேண்டும் ஏனெனில் கடித போக்குவரத்து தொடர்பான படம் என்பதால் குரலுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் இருந்தது. எனவே யாரை டப்பிங் செய்ய வைக்கலாம் என யோசித்த சேரனுக்கு மீனாவின் நினைவு வந்தது.

நடிகை மீனா கொஞ்சும் தமிழில் பேசக்கூடியவர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இன்னும் இரண்டு நாட்களில் அவருக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவரை டப்பிங் பேச கூப்பிட்டால் வருவாரா என்கிற சந்தேகம் சேரனுக்கு இருந்தது.

இந்த நிலையில் மீனாவிடம் போன் செய்து இது பற்றி பேசினார். ஆனால் சற்றும் தயங்காத மீனா நாளையே வந்து நான் டப்பிங் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை சேரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். எந்த ஒரு நடிகையும் திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு வேலை சொன்னால் செய்ய வர மாட்டார்கள் அது எனக்காக அதை செய்தார் மீனா என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அந்த படத்தில் நடிக்கிறேன்னு விஜய் என்னை ஏமாத்திட்டாரு!.. வெளிப்படையாக கூறிய சேரன்..

குடும்ப படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். தொடர்ந்து குடும்ப பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் சேரனின் கதைகளங்கள் அமையும். அப்படியான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியிலும் கூட ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

சேரன் நடித்து வெளியான தவமாய் தவமிருந்து திரைப்படம் இப்போதும் கூட மக்கள் மத்தியில் விருப்பமான படமாகும். இந்த நிலையில் காதலை மையப்படுத்தி சேரன் ஒரு கதையை எழுதினார். இந்த கதைக்கு ஒரு இளம் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.

அந்த சமயத்தில் விஜய் படத்திற்கு கதை கேட்டு வந்ததால் அவரிடம் அந்த படத்தின் கதையை கூறினார் சேரன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் சேரன் சொன்ன அந்த கதையை பொறுமையாக கேட்டார் விஜய். அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது.

கண்டிப்பாக அந்த படத்தில் நடிக்கிறேன் என கூறினார். ஆனால் அதன் பிறகு தனக்கு தேதி இல்லை என்று அந்த படத்தை புறக்கணித்தார் விஜய். பிறகு சேரனே கதாநாயகனாக நடித்து ஆட்டோக்கிராப் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. அதற்கு வெகுவான வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட 100 நாளை தாண்டி அந்த படம் ஓடியது.

ஒருவேளை அதில் விஜய் நடித்திருந்தால் இன்னமும் ஹிட் அடித்திருக்க வேண்டிய படம் அது. இந்த விஷயத்தை சேரன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

எங்களை கெட்ட வார்த்தையில் திட்டினார் சேரன்!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

தமிழில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். சேரன் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. ஆட்டோகிராஃப் திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் அது மிகவும் பிரபலமாக இருந்தது.

அப்போது அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடலை அனைவருமே கேட்டிருப்போம். ஒரு அளவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் சேரன். அந்த சமயத்தில் சில படங்களில் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.

சேரன் நடித்த படங்களில் ராமன் தேடிய சீதை திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் சேரன் குறித்து சர்ச்சையை கிளப்பும் செய்தி ஒன்றை ரிப்போர்ட்டர் எழுதிவிட்டார்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் மீட்டிங் நடந்தப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கெட்ட வார்த்தையில் திட்டினார் சேரன். இப்போது பிரபலமாக இருக்கும் வலைப்பேச்சு அந்தனனும் அந்த மீட்டிங்கில் இருந்தார்.

இந்த பேச்சால் கடுப்பான அவர், தப்பு செஞ்சவங்களை மட்டும் பேசுங்க. பொதுவா எல்லாரையும் எப்படி நீங்க திட்டலாம். என அவர் கேட்க சேரனுக்கும் அவருக்கும் சண்டை ஆனது. இதை அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அப்படிதான் சார் திட்டுவேன்.. என்ன சார் செய்வீங்க!.. சேரனை வம்புக்கிழுத்த மிஸ்கின்..

Seran and Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கிய பல படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இயக்குனராக இருந்த மிஷ்கினுக்கு நடிப்பின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது.

அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க துவங்கினார். தற்சமயம் அவரது நடிப்பிற்குமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே பெரும் ஹீரோக்கள் படங்களில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிஷ்கின்.மிஸ்கினுக்கும் இயக்குனர் சேரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பேச்சு இருந்தது.

எனவே இது குறித்து ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது சேரன் இருக்கும் சமயத்தில் நான் எனது உதவி இயக்குனரை திட்டினேன், அப்பொழுது சேரன் என்னிடம் வந்து நான் இருக்கும்போது இப்படி எல்லாம் திட்டாமல் இருங்களேன் சார் என கூறினார்.

அதற்கு நான் இது எனக்கும் உதவி இயக்குனருக்கும் இருக்கும் பிரச்சினை அதற்குள் நீங்கள் தலையிடாதீர்கள், உங்களை திட்ட வேண்டும் என எனக்கு தோன்றினால் நேரடியாக திட்டி விடுவேன் என்று பதில் அளித்துள்ளார் மிஷ்கின். இதனை மிஷ்கினே அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

100 கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் இயக்குனர் சேரன்!.. – ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி பல படங்கள் இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற அவரது திரைப்படங்கள் வந்த காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.

நடுநிலை வர்க்கத்தை சேர்ந்த மக்களின் குடும்ப பிரச்சினைகளை பிரதிபலிக்கும் விதமாகவே சேரனின் திரைப்படங்கள் அமைந்திருந்தன. இதுவரை அதிக பட்ஜெட்டில் ஒரு மாஸ் திரைப்படத்தை சேரன் இயக்கியதே கிடையாது. இந்த நிலையில் தற்சமயம் கர்நாடகாவில் புகழ்பெற்ற நடிகரான கிச்சா சுதீப் வைத்து சேரன் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என கூறப்படுகிறது இதுவரை சேரன் இவ்வளவு அதிகபட்சத்தில் எந்த ஒரு திரைப்படமும் இயக்கியது கிடையாது. எனவே இந்த திரைப்படம் நிச்சயமாக ஒரு கமர்சியல் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது சேரன் திரைப்படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் ஒரு வரவேற்பு இருப்பதால் இந்த திரைப்படம் குறித்தும் அவர்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது.