Tag Archives: sivakarthikeyan

அடுத்து மூன்று முக்கிய கதாநாயகர்களுடன் இணைகிறார் கமல்

விக்ரம் திரைப்படம் நடிகர் கமலுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அதையடுத்து அவர் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் எண்டர்டெயின்மெண்டை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கு முன்பும் பல படங்களை கமல்ஹாசன் இயக்கியுள்ளார்.

ஆனால் விக்ரம் திரைப்படம் அளவுக்கு எந்த படமும் வசூல் சாதனை செய்யவில்லை. இதையடுத்து இனி சில கமர்ஷியல் திரைப்படங்களையும் தயாரித்தால் என்ன? என முடிவு செய்துள்ளார் கமல்.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் படம் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் உள்ள நிலையில் கமல் மேலும் சில நடிகர்களை கொண்டும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, மற்றும் உதயநிதி ஆகிய கதாநாயகர்களை கொண்டு மூன்று தனி தனி திரைப்படங்களை கமல் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இனி கமல் தயாரிப்பில் பல படங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

மாவீரன் படப்பிடிப்பு துவக்கம் –  சங்கர் மகளுடன் நிற்கும் சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு அடுத்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். 

தற்சமயம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவும் சிவகார்த்திகேயன் சம்பளமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அவர் நடித்து மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் தற்சமயம் மாவீரன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

கிட்டத்தட்ட பழைய ரஜினிகாந்தின் தோற்றத்தை இந்த படத்தில் கொண்டு வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார்.

key

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பானது நேற்று துவங்கியது. நடிகை அதிதி சங்கர் ஆசைக்காக விருமன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என பேசப்பட்டது. ஆனால் தற்சமயம் அவர் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடிப்பதை வைத்து பார்க்கும்போது அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாவீரன் திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.

சிவகார்த்திகேயனை யாருன்னே தெரியாது என சொன்ன மிஸ்கின் – இப்ப நிலைமையே மாறிடுச்சி

சினிமாவை பொறுத்தவரை உயர்வு தாழ்வு என்பது இருந்துக்கொண்டே இருக்கும். எப்போதும் ஒரு நடிகரால் வெற்றி படம் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது. அதே போல எப்போதும் ஒரு நாயகன் தோல்வியையே காண்பது கிடையாது.

2014 ஆம் ஆண்டு காபி வித் டிடி என்னும் விஜய் டிவி நிகழ்ச்சியில் இயக்குனர் மிஸ்கின் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒவ்வொரு நாயகர்கள் பெயரை சொல்ல சொல்ல அதற்கு மிஸ்கின் அவருக்கு தோன்றும் பதிலை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் இன்னும் பல்வேறு நடிகர்கள் பெயர்கள் கூறப்பட்டது. அதற்கு மிஸ்கினும் பதில் அளித்து வந்தார். அப்போது சிவகார்த்திகேயன் பெயரை சொல்லும்போது “யார் சிவகார்த்திகேயன் எனக்கு தெரியாது” என கூறினார் மிஸ்கின்.

அந்த சமயத்திலேயே சிவகார்த்திகேயன் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் மிஸ்கின் கூறும்போது எனக்கு சிவகார்த்திகேயனை தெரியாது என்றே கூறினார்.

பல தோல்விகள், பண நெருக்கடி என பல விஷயங்களை கண்டபோதும் சிவகார்த்திகேயன் தற்சமயம் சினி துறையில் வளர்ச்சியை கண்டு வருகிறார். பெரும் ரஜினி ரசிகரான இவர் தனது பாணியில் நடிகர் ரஜினிகாந்தை போல பல விஷயங்களை செய்வதை நாம் பார்க்கலாம்.

அந்த வகையில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த மாவீரன் படத்தின் பெயரை கொண்டு சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

கிட்டத்தட்ட இந்த படத்தில் ரஜினியை போலவே இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஸ்கின் நடிக்கிறார். ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் யார் என கேட்ட மிஸ்கினே தற்சமயம் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார், அதுதான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

என்னென்ன சொல்றாரு பாருங்க –  சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி கதாநாயகன் என்கிற பானியில் சினிமாவிற்குள் வரும் பலரும் ஒரு கமர்ஷியல் கதாநாயகன் நிலையை எட்டி விடுவதில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் தனது படங்களில் காமெடிகளை கொண்டிருந்தாலும், ஒரு கமர்ஷியல் கதாநாயகன் நிலையை அடைந்துவிட்டார் என்றே கூறலாம்.

தற்சமயம் இவர் நடித்து வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் ஆரம்பம் முதலே பயங்கரமான ரஜினி ரசிகர் ஆவார். ரஜினியும் கூட டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை பாராட்டியிருந்தார்.

இன்றோடு ரஜினி அவர்களின் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சிவாஜி ஒரு முக்கியமான படமாகும். இதுப்பற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது, “நான் சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் திரையரங்கில் பார்த்துள்ளேன். அவரின் ஸ்டைல் மற்றும் நடை இரண்டுமே அற்புதமாக இருக்கும். இப்படி ஒரு அற்புதமான படத்தை அளித்ததற்கு சங்கர் சாருக்கும், ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கும் நன்றி” என கூறியிருந்தார்.

இந்நிலையில் யூ ட்யூப் பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இதை கலாய்த்து மீம் ஒன்றை தயார் செய்து போட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

என் படம்னா பட்ஜெட் அதிகமா இருக்கணும் –  விஜய் இடத்துக்கு குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அடுத்து அடுத்து வெளியாகும் திரைப்படங்களும் அவருக்கு நல்ல வெற்றியை அளித்து வருகின்றன.

சமீபத்தில் சிவ கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து டான் திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்தது டான் திரைப்படம்.

இதையடுத்து இனி பெரிய ஹீரோக்கள் போல அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளாராம். 

எனவே அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பட்ஜெட் 50 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும் என கூறுகிறாராம்.

பொதுவாக விஜய், அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும். தற்சமயம் சிவக்கார்த்திகேயன் இவ்வாறு கூறுவதால் அவரும் கூட பெரிய ஹீரோக்கள் இடத்தை பிடிக்க நினைக்கிறாரா? என திரைத்துறையில் பேச்சு உள்ளது.

டான் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? – மாஸ் காட்டும் எஸ்.கே..!

தமிழ் சினிமாவில் காமெடி கான்செப்ட்களை கொண்டும் கதாநாயகன் ஆக முடியும் என நிரூபித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் அவர் நடித்து வெளியான டான் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு இது முதல் படமாகும்.

பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு செண்டிமெண்ட் வராது என பேசப்பட்டு வந்தது. அதற்கு சவால் விடும் விதமாக டான் திரைப்படத்தில் அதிக செண்டிமெண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி இன்னும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.

நடிகர் எஸ்.ஜே சூர்யா இதில் பிரின்சிபலாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. 

ஏனெனில் ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இருந்தார். இந்த நிலையில் வெளியான டான் திரைப்படம் 12 நாள் முடிவில் 100 கோடி வசூலை எட்டியது.

தற்சமயம் 13 நாள் வரை மொத்தமாக 102 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது டான் திரைப்படம். 

வசூலில் வலிமையை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயனின் டான்


சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் டான். திரை துறையில் வந்த காலம் முதலே ரசிகர்களிடம் ஒவ்வொரு திரைப்படத்தின்போதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் சிவகார்த்திகேயன்.


பொதுவாக திரைப்படங்களில் மக்கள் கதையை எதிர்ப்பார்ப்பதுண்டு. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் அதிகப்பட்சம் காமெடியை எதிர்ப்பார்த்தே மக்கள் செல்கின்றனர். ஆனால் தற்சமயம் நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ போன்ற படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.


அந்த வரிசையில் டான் திரைப்படமும் கூட மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு செண்டிமெண்ட் வராது என பேசப்பட்டு வந்தது. அதற்கு சவால் விடும் விதமாக டான் திரைப்படத்தில் அதிக செண்டிமெண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் நல்ல வசூலை கொடுத்த டான் திரைப்படம் வெளிநாட்டிலும் கூட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலண்டனில் இந்த வரும் அதிகமாக ஓடிய டாப் 3 படங்களில் முதல் இடத்தில் பீஸ்ட், இராண்டாம் இடத்தில் டான், மூன்றாம் இடத்தில் வலிமை உள்ளது.

விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்..? – டாப் வசூலுக்கு வந்த டான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான படம் டான். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த வாரத்தில் வெளியானது. கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் காமெடி மற்றும் அப்பா செண்டிமெண்ட் காட்சிகளும் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் டான் நல்ல வசூலை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் கவனிக்கத்தக்க வசூலை டான் நிகழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படமாக முதல் இடத்தில் பீஸ்ட் உள்ளது. மொத்தமாக 1.38 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அஜித்தின் வலிமை 410K டாலர்களை வசூலித்துள்ளது.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள டான் 353K டாலர்களை வசூலித்துள்ளது. வரும் வார இறுதியில் இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மார்க்கெட்டில் விஜய், அஜித்துக்கு நிகரான இடத்தை சிவகார்த்திகேயனும் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணிட்டிங்களே – கண்ணீர் விட்ட ரஜினி


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.


இந்த படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆவார். அவருடைய கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.


கல்லூரி பிரின்ஸ்பலாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். பலரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது ”இந்த படம் உங்களுக்கு பழைய கல்லூரி நியாபகங்களை நினைவுப்படுத்தும் திரைப்படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.


அதே போலவே இந்த படத்தில் எமோசனலான இடங்கள் பலவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் டான் படத்தை திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினி அதன் கடைசி காட்சிகளை பார்க்கும்போது கண்ணீர் விட்டு அழுததாகவும், இறுதி 30 நிமிடங்கள் உணர்வு பூர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

5 நாள்ல அசால்ட்டான வசூல்.. சாதித்த “டான்”! – வசூல் நிலவரம் இதுதான்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் டான்.

இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

சமூக கருத்துக்களுடன், காமெடியையும் கலந்து படத்தை கொண்டு போன விதம் மக்களுக்கு பிடித்திருக்கவே ஆரம்பம் முதலாக நல்ல விமர்சனத்தை டான் எதிர்கொண்டு வருகிறது.

முக்கியமாக குழந்தைகளுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. வழக்கம்போல சிவகார்த்திகேயன் ஒரு டீசண்டான வசூலை டான் படத்தில் கொடுத்துள்ளார்.

படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை 5.75 கோடி ரூபாயும், செவ்வாய்கிழமை 4.50 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மொத்தமாக 5 நாட்களில் தமிழகத்தில் 41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

டான் ரிலீஸ் – திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர்

சின்னத்திரை வழியாக வந்து வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.
மக்களை நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் பிறகு அதையே தனக்கான தனி திறமையாக மாற்றி நடிக்கும் கதைகளிலும் கூட தன்னை ஒரு காமெடி கதாநாயகனாக மாற்றிக்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்.


வரிசையாக வந்த நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் சொல்லும் படங்களாக அமைந்த நிலையில் டான் திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொதுவாக பேச்சு இருந்தது.


தற்சமயம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது டான் திரைப்படம். இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு இது முதல் படமாகும். இந்த திரைப்படத்திற்காக அவர் வெகுவாக உழைத்து உள்ளதாக சிவகார்த்திகேயன் டான் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திரையரங்கில் டான் திரைப்படத்தை காண சிபி சக்ரவர்த்தி சென்றுள்ளார்.

அங்கே அவரது பெயர் திரையில் வரும்போது அதை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். இதை கண்ட சிபி சக்ரவர்த்தி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

தனது கனவு நினைவானது குறித்து பெருமகிழ்ச்சி கொண்ட சிபி சக்ரவர்த்தி, இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

குக்கு வித் கோமாளியை பரபரப்பாக்கிய டான் குழு


இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.


குக்கு வித் கோமாளி சீரியல் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு தொடராகும். எனவே பல திரைப்படங்களுக்கு ஒரு ப்ரோமோஷனாக அந்த திரைப்பட நடிகர்கள் குக் வித் கோமாளி ஷோவிற்கு வருவது வழக்கமாகிவிட்டது.


ஏற்கனவே ஹே சினாமிகா குழு இதே போலவே குக் வித் கோமாளியில் எண்ட்ரி கொடுத்த நிலையில் இன்றைய குக் வித் கோமாளி ஷோவில் டான் பட குழுவினர் குக் வித் கோமாளியில் எண்ட்ரி கொடுக்கின்றனர்.


டான் படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா மோகன் குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ளனர். இதனால் இன்றைய குக் வித் கோமாளி ஷோவிற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
மேலும் டான் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சிவாங்கி, முனிஸ்காந்த் மற்றும் சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கின்றனர்.