Tag Archives: suriya

ரெட்ரோவும், டூரிஸ்ட் பேமிலியும் – 4 நாள் வசூல் நிலவரம்..!

சமீபத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் மே 1 அன்று திரையரங்கிற்கு வந்தன. ஹிட் 3, டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ. இதில் ஹிட் 3 மட்டும் தெலுங்கு திரைப்படமாகும்.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படத்திற்கு ஏற்கனவே வரவேற்புகள் இருந்து வந்தன. சூர்யாவுக்கும் கூட இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதற்கு நடுவே நடிகர் சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் மே 1 அன்று வெளியானது. இந்த திரைப்படத்தை 24 வயதே ஆன அபிஷன் ஜீவந்த் என்கிற இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளே 19 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாம் நாளே வசூல் குறைந்தது. கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 76.3 கோடி வசூல் செய்துள்ளது ரெட்ரோ.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்கு ரெட்ரோவிற்கு கிடைத்த அளவிற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே முதல் நாளே 2 கோடிதான் வசூல் செய்தது. இதுவரை மொத்தமாக 12 கோடி வசூல் செய்துள்ளது டூரிஸ்ட் பேமிலி.

அங்க சுத்தி.. இங்க சுத்தி..! சூர்யா சோற்றில் கையை வச்ச எஸ்.கே..

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தில் முன்னாள் நகைச்சுவை நடிகர் சூரி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ஹீரோவாக அறியப்பட்டார்.

அதன் பிறகு வெளிவந்த கருடன் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்ற சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொட்டுக்காளி திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகி அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

தற்போது வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிவகார்த்திகேயன், பாடலாசிரியர், பாடகர், நடிகர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இவரின் தயாரிப்பில் வெளிவந்த கொட்டுக்காளி திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், பலரும் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி ஆக எடுக்கப்பட்ட கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பலராலும் பாராட்டு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் அமீர் கொட்டுக்காளி திரைப்படத்தை நான் தயாரித்து இருந்தால் நிச்சயம் திரையரங்குகளில் வெளியிட மாட்டேன். ஏனென்றால் சர்வதேச விருதுக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் நிச்சயம் பொதுவான ஆடியன்ஸை கவராது என எனக்கு தெரியும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது இது ஒருபுறம் நடக்க, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

சூர்யாவுக்கு பதிலாக எஸ். கே

கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்த வினோத்திடம் தனக்கு ஒரு கதை எழுதுமாறு கூறியிருக்கும் சிவகார்த்திகேயன், அதற்காக இயக்குனர் வினோத்தும் தயாராகி வரும் நிலையில், சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் புறநானூறு திரைப்படத்தில் தற்போது சூர்யாவிற்கு பதில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் தெரிவிக்காத நிலையில் தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம் பட க்ளைமேக்ஸில் யாருமே நோட் பண்ணாத விஷயம்.. இப்படி ஒரு அரசியலை சூர்யா பேசி இருக்காரே?.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களில் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் விக்ரம். பல முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, சூர்யா பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி நரேன், சந்தான பாரதி, செம்பன் வினோத், இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருந்தார். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் இந்த படத்தை தயாரித்திருந்தது.

மேலும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைக்க கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

ரோலக்ஸ் ரோலில் நடிகர் சூர்யா

விக்ரம் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் வரும் அந்த சிறிது நேரம் ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக இருந்தது.

மேலும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு நடிகர் சூர்யாவின் அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த சிறிய நேரம் வரும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா கூறும் டயலாக் ரசிகர்கள் தியேட்டரில் தெறிக்க விட்டனர் என்று தான் கூற வேண்டும். அதில் அவர் “சும்மா அப்பனோ பாட்டனோ எனக்கு இந்த இடத்தை கொடுக்கல டா.. இந்த இடத்தை பிடிக்க எனக்கு 28 வருஷம் ஆனது” அப்படி என்று கூறுவார். இந்த டயலாக் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா

இந்நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அவர் பேசியிருக்கும் அந்த டயலாக் அது அவருக்கே பொருத்தமானதாக இருந்தது. காரணம் அவரின் திறமையினால் மட்டுமே தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார் யாருடன் உதவியும் இல்லாமல் தன்னுடைய நடிப்பின் மூலம் மட்டுமே ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் சூர்யா.

வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை விலக்குவது வருத்தமாக உள்ளது? – இயக்குனர் பாலாவின் அதிர்ச்சி தகவல்?

இயக்குனர் பாலா திரைப்படம் என்றாலே மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். வித்தியாசமாக தனது திரைப்படத்தில் எதாவது ஒன்றை செய்பவர் பாலா.

இந்த நிலையில் இயக்குனர் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை எடுக்க இருந்தார். ஏற்கனவே பிதாமகன், நந்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பாலா.

இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் இருந்து சூர்யாவை விலக்குவதாக பாலா அறிவித்துள்ளார். படத்தின் கதைக்கும் சூர்யாவிற்கும் ஒத்து வராது என தோன்றியதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் சூர்யா இந்த கதைக்கு தகுதியாய் இருந்தது போல தோன்றியது.

ஆனால் இப்போது இந்த கதை சூர்யாவிற்கு ஏற்றதாக தோன்றவில்லை. எனவே இருவரும் ஒன்றாக பேசி இந்த முடிவிற்கு வந்தார். சூர்யா நீங்கியதால் வணங்கான் பட வேலைகள் நிற்காது. வேறு கதாநாயகனை வைத்து எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாலாவிற்கு சூர்யாவிற்கும் மனகசப்பு ஏற்பட்டு அதனால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பாரோ என்கிற சந்தேகமும் பலருக்கு வருகிறது.

மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி – சூர்யாவுக்கு மறுபடியும் ஹிட் படமா?

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி வெளியான திரைப்படம்தான் ஜெய் பீம். உண்மை நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் முக்கிய பிரச்சனைகளை பேசியது.

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. சீனாவிலும் கூட இந்த படம் திரையிடப்பட்டது.

அங்கும் அதிக அளவிலான வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படமும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருந்தது. இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு திரைப்படம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.