Tag Archives: thalapathy 70

தளபதி 70க்கு ப்ளான் இருக்கா.. சீக்ரெட்டை வெளியிட்ட மூத்த சினிமா பிரபலம்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அதே சமயத்தில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விஷயத்தையும் அறிவித்தார். அரசியலுக்கு வந்த பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலக போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம்தான் அவரது இறுதி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதற்கு பிறகு விஜய் படம் எல்லாம் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் சினிமா வட்டாரத்தில் வேறு விதமாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது விஜய் பிளான் பி ஒன்று வைத்துள்ளார். அதன்படி 2026 தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார் என்றால் கண்டிப்பாக பிறகு சினிமாவுக்கு வர மாட்டார்.

vijay tvk

ஆனால் அதற்கு பதிலாக தோல்வியடைந்தால் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியல் பணிகளிலும் ஈடுபாடு காட்டுவார் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் தொடர்ந்து ஆளுங்கட்சிகளை விமர்சித்து பேசி வருகிறார். அது அவரது திரை வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் பேசப்படுகிறது.

இதற்கு நடுவே நடிகர் விஜய்க்கு மீண்டும் சினிமாவிற்கு வருவதற்கு ப்ளான் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். சினிமா பிரபலம் சித்ரா லெட்சுமணன். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.

தளபதி 70 இந்த இயக்குனர் கூடதான்.. அடேங்கப்பா இது லிஸ்ட்லையே இல்லையே.. பேன் இந்தியா இயக்குனர் படத்தில் களம் இறங்கும் விஜய்.!

Ever since actor Vijay entered politics, he will not act in any further films, Thalapathy 69 was said to be his last film. But then there are reports that he is going to act in his 70th movie

தற்சமயம் நடிகர் விஜய் அவரது கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் விஜய் இப்போதுவரை அதுதான் அவருடைய கடைசி படம் என்று கூறவில்லை. 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் திரைப்படத்தில் நடிப்பதாகவும் அதற்குப் பிறகு நடிக்க போவதில்லை என்றும் மட்டும்தான் குறிப்பிட்டாரே தவிர தளபதி 69 திரைப்படம் தான் அவரது இறுதி படம் என்று அறிவிக்கவே இல்லை.

vijay tvk

விஜய்யின் அடுத்த படம்:

ஆனால் இந்த படத்திற்கு பிறகு கட்சி வேலைகள் அதிகமாக இருப்பதால் இன்னொரு படத்தில் விஜய் நடிக்க மாட்டார் எனவே இந்த படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த நிலையில் சினிமா வட்டாரங்களில் இன்னொரு தகவல் பரவி வருகிறது அதாவது நடிகர் விஜய் 70-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதுதான் அவருடைய கடைசி படம். 2026 தேர்தலுக்குள் அந்த படம் வந்துவிடும். ஏனெனில் இப்பொழுது அவர் நடித்துவரும் தளபதி 69 திரைப்படத்தின் பாதிக்கு அதிகமான படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.

ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் பிறகு அவர் தளபதி 70 திரைப்படத்திற்கான வேலையில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்க உள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படம் தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.