தமிழில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் வில்லனாக நடித்தாலும் சரி ஹீரோவாக நடித்தாலும் சரி இவரது நடிப்பை பார்ப்பதற்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு நடிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஒருமுறை ஒரு மேடை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பொழுது புதிதாக ஒரு நபரை அழைத்து வந்திருந்தார்.
அந்த நபர் சினிமா துறையை சேர்ந்தவர் கிடையாது, விஜய் சேதுபதியின் குடும்ப உறுப்பினர்களின் ஒருவரும் கிடையாது அப்படியென்றால் அவர் யார்? என்று பார்க்கும் பொழுது விஜய் சேதுபதி அவரைப் பற்றி குறிப்பிட்டார். அதாவது விஜய் சேதுபதி படங்களில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது இவர் தான் விஜய் சேதுபதிக்கு போன் செய்து இயக்குனர் சீனு ராமசாமி ஒரு கதையை எழுதி வைத்துள்ளார்.
அதற்கு கதாநாயகனை தேடிக் கொண்டிருக்கிறார். நீ அந்த கதைக்கு சரியாக இருப்பாய். அதனால் நேரில் சென்று அவரை பார் என்று கூறியுள்ளார். அதன்படி விஜய் சேதுபதியும் அவரை நேரில் சென்று கண்டுள்ளார். அந்த படம்தான் தென்மேற்கு பருவக்காற்று.
எனவே விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையை திறந்து வைத்தவர் அந்த நபர் தான் என்று கூறி அவரை அழைத்து வந்து பெருமைப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி.