Tag Archives: TVK

முதல்வர் விஜய்யின் அடுத்த திட்டங்கள்.. வைரலாகும் போஸ்டர்.. இதுதான் காரணமா?

நடிகர் விஜய் போன வருடம் ஜனவரி மாதம் தனது கட்சி பெயரை அறிவித்தார். அதிலிருந்து தொடர்ந்து கட்சி தொடர்பான பணிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விஜய்.

இப்பொழுது அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது கூட இல்லை. அவர் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் மட்டும் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மற்றபடி தொடர்ந்து அரசியலில்தான் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவரது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் மாதம் விஜய் ஒரு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அந்த மாநாடு முடித்த கையோடு தேர்தல் வரையிலும் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் போஸ்டர் ஒன்று சமீபத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் முதல்வர் விஜய்யின் திட்டங்கள் என்பதாக ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது.

இன்னும் விஜய் முதல்வராகவே ஆகாமல் இருக்கும் நேரத்தில் எப்படி இப்படி ஒரு வசனம் போஸ்டரில் வந்தது என பார்க்கும் பொழுது இது ஒரு படத்தின் ப்ரமோஷன் என தெரிகிறது.

யாதும் அறியான் என்கிற ஒரு திரைப்படத்தின் டிரைலரில்தான் இந்த போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அப்பு குட்டி, தினேஷ், தம்பி ராமய்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது ஒரு ஹாரர் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் கதைப்படி 2026 ஆம் ஆண்டு கதை நடக்கிறது அந்த சமயத்தில் விஜய் முதல்வராக இருப்பதாக குறிப்பிடும் படி அப்படியான வசனம் இடம் பெற்ற செய்தி தாள் கொண்ட ஒரு காட்சி அந்த படத்தில் இருக்கிறது அதுதான் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது.

மத்தவங்க மாதிரி இவர் இல்ல.. விஜய் குறித்து அஜித்தின் தாயார் உருக்கம்..!

நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே மக்களுக்கு ஆதரவாக நிறைய முறை நின்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருப்புவனத்தை சேர்ந்த அஜித் என்கிற இளைஞன் தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிக சர்ச்சையை கிளப்பி வந்தது. மக்கள் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர்.

இதனையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு நடுவே த.வெ.க தலைவர் விஜய் நேற்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அஜித்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதுடன் 2 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும் கொடுத்துள்ளார் விஜய்.

எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்..  நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!

நடிகர் விஜய்யை போலவே நடிகர் அஜித்தும் தமிழ் சினிமாவில் பெரு வாரியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இருவரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதில்தான் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போட்டி இருந்து வரும். அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்க நடிகர் என்றாலும் பொதுவெளியில் அஜித்தை அவ்வளவாக பார்க்க முடியாது.

விருது வழங்கும் விழா, படத்தின் ப்ரோமோஷன் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. அவரின் கடந்த கால வாழ்க்கையே அதற்கு காரணம். சினிமாவில் ஆரம்பத்தில் அரசியல் மீது எல்லாம் அஜித்திற்கு ஆர்வம் இருந்தது.

அந்த சமயங்களில் மேடைகளில் பேசும்போது அஜித் விளையாட்டாக பேசும் பல விஷயங்களை பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி எழுதின. இதனால் அஜித்திற்கு பட வாய்ப்புகளில் கூட பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு பிறகுதான் அஜித் பத்திர்க்கைகளில் பேசுவதை நிறுத்தினார்.

இந்த நிலையில் வெகு காலங்கள் கழித்து தற்சமயம் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அஜித். அதில் அவரிடம் அரசியல் சார்ந்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களுக்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறதா? நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அஜித் கூறும்போது அரசியல் மீது எனக்கு பெரிய ஆர்வம் கிடையாது. ஆனால் அரசியலுக்கு செல்வதற்கு தனிப்பட்ட பெரிய தைரியம் தேவை. ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் பொறுப்பை தலையில் சுமக்க தயாராய் இருப்பது மிகப்பெரிய பொறுப்பாகும்.

எனவே அரசியலுக்கு நடிகர்கள் வர நினைப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம். என கூறிய அஜித் அரசியலுக்கு வந்துள்ள தனது நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஐயோ விடுங்க.. தம்பி.. பவர் ஸ்டாருக்கு போன் போட்டு சண்டை போட்ட த.வெ.க நிர்வாகி..!

தற்சமயம் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சிகளில் முக்கிய கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருந்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வளர்ச்சியை கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் கட்சி துவங்கியப்போது இந்த அளவிற்கு அந்த கட்சிக்கு வரவேற்பு கிடைக்கும் என்று பலரும் நினைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய் எந்த தொகுதியில் போட்டி இடுகிறாரோ அந்த தொகுதியில் நானும் போட்டியிடுவேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மதுரை த.வெ.க நிர்வாகி பவர் ஸ்டாருக்கு போன் செய்துள்ளார்.

அவர் பவர் ஸ்டாரிடம் பேசும்போது ஏன் சார் இப்படி செய்கிறீர்கள். திமுக மாதிரியான பெரிய கட்சியை எதிர்த்து திரைத்துறையை சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார் எனும்போது நீங்கள் அவருக்கு ஆதரவாகதானே இருக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த பவர் ஸ்டார் சீனிவாசன் தேர்தல்னா போட்டி இருக்கணும் தம்பி. நான் நின்னாலும் கூட நடிகர் விஜய்தான் ஜெயிப்பார். இதை பெருசா எடுத்துக்காதீங்க என அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்த ஆடியோ இப்போது பிரபலமாகி வருகிறது.

நீங்கதான ஆசைப்பட்டீங்க வச்சிக்கோங்க… திமுக குறித்து விஜய்.!

த.வெ.க கட்சியின் தலைவரான விஜய் சமீபத்தில் பொது கூட்டத்தில் பேசிய விஷயங்கள் அதிக ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்த பொதுக் கூட்டத்தில் நிறைய விஷயங்களை விஜய் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

முக்கியமாக கட்சிகளையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களது பெயர்களை கூறி பேசி இருந்தார் விஜய். இதற்கு முன்பு விஜய் மாநாட்டில் பேசியபோதும் சரி மற்ற விழாக்களில் பேசும் பொழுதும் சரி, நேரடியாக அவர்களது பெயரை சொல்லி அழைக்கவில்லை.

vijay tvk

இந்த நிலையில் அரசியல் தலைவர்களின் பெயர்களை சொல்வதற்கு விஜய்க்கு பயம் என்று எல்லோரும் கூறி வந்தனர். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரையும் மத்திய அரசில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

விஜய் பற்றி அவர் கூறும் பொழுது இந்த மன்னர் ஆட்சி முறையை தடுக்க வேண்டும் ஒரு அரசியல் ஆட்சியில் பல குடும்பங்கள் வாழ வேண்டுமே தவிர ஒரே குடும்பமே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது.

நேற்று வந்த ஆட்கள் எல்லாம் இப்பொழுது முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறார்கள் என்று என்னை குறித்து பேசுகிறீர்கள் ஆனால் எங்கள் கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் தடுக்க நினைக்கிறீர்கள் என்று திமுக குறித்து பேசி இருக்கிறார் விஜய்.

தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா டீல் பண்ணுங்க.. ஒன்றிய அரசுக்கு விஜய் பதிலடி..!

விஜய்யின் கட்சியான தா.வெ.க கட்சியின் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் இப்பொழுது அதிகமாக ட்ரெண்ட் ஆக துவங்கியிருக்கிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பெரிதாக பரவுகின்றன.

இந்நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. பல காலங்களாகவே விஜய் கட்சி துவங்கியது முதலே எந்த ஒரு கட்சியின் பெயரையும் அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நேரடியாக கூறுவதே கிடையாது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து விஜய் இந்த பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க கட்சியை குறிப்பிட்டு பேசியிருந்தார் இந்த நிலையில் அவர் ஒன்றிய அரசு குறித்து பேசும்பொழுது தமிழ்நாடு ஒரு புரட்சிகரமான மாநிலம்.

தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கொஞ்சம் கேர்ஃபுல்லாக தான் கேண்டில் செய்ய வேண்டும் எங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க மாட்டேன் என்கிறீர்கள் புதிய கல்விக் கொள்கையை எங்கள் மீது திணிக்கிறீர்கள் நீங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் பொழுதே உங்களுடைய நோக்கம் என்னவென்பது தெரிந்து விட்டது என்று பேசியிருக்கிறார் விஜய்.

விஜய் கட்சியில் இந்த பதவி கேப்பேன்.. சத்யராஜின் அதிரடி முடிவு..!

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் த.வெ.க கட்சி குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் சரத்குமார் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர் சத்யராஜ்.

ஒரு வருடத்தில் எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு சத்யராஜ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது.

ஆனாலும் புது நடிகர்களின் வருகைக்கு பிறகு சத்யராஜ் மார்க்கெட் குறைய தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. நடித்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது.

அதனை தொடர்ந்து இப்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தனக்கு நல்ல சம்பளம் கிடைப்பதாக சத்யராஜ் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த பதவியில் சேர்வீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சத்யராஜ் கண்டிப்பாக நான் பெரியார் தொடர்பான ஒரு பதவியை தான் எடுப்பேன்.

பெரியாரின் கருத்துக்களை பரப்பும் ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவி எனக்கு கிடைத்தால் அதை நான் எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் சத்யராஜ். இதன் மூலம் சத்யராஜ் தமிழக வெற்றி கழகத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

முதலில் அவரை பத்திர்க்கையாளர்களை சந்திக்க சொல்லுங்க.. விஜய்க்கு பதிலடி கொடுத்த நடிகர் விஷால்..!

நடிகர் விஜய்க்கு முன்பு இருந்தே அரசியலின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் கட்சி துவங்கிய பொழுது விஷாலும் கட்சியை துவங்கி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஷால் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர இப்பொழுது வரை அரசியலுக்கு வரவில்லை.

ஆனாலும் கூட அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுப்பதை தொடர்ந்து விஷால் செய்து வருகிறார். ஒவ்வொரு முறை சென்னையில் பேரிடர் ஏற்படும் பொழுதும் கொரோனா போன்ற காலகட்டத்தின் பொழுதும் தொடர்ந்து தனது குரலை பதிவு செய்து வந்திருக்கிறார் நடிகர் விஷால்.

இதனால் அரசியல் சார்ந்த கேள்விகளையும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி விஷாலிடம் கேட்பது உண்டு. இந்த நிலையில் நடிகர் விஜய் எப்போதுமே ஆளுங்கட்சிகளையும் மத்திய அரசையும் நேரடியாக பேசுவதே கிடையாது என்று இது குறித்து விஷாலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த விஷால் இதுவரை விஜய் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று ஒன்று வைக்கவே இல்லை. முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு வைக்க சொல்லுங்கள். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் இந்த கேள்விகளை எல்லாம் கேளுங்கள்.

இதை என்னிடம் கேட்டால் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் விஷால். இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியா? என்று விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் சமூக ஈடுபாடு கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார்.

விஜய் நடத்துற பள்ளியில் ஹிந்தி இருக்கு.. ஆவணங்களோடு வந்த அண்ணாமலை.!

தற்சமயம் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக இருந்து வருகின்றது மும்மொழி கொள்கை என்கிற கொள்கையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை பாடத்திட்டங்களில் சேர்ப்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையாக இருக்கிறது.

இதனை எதிர்த்துதான் பலரும் பேசி வருகின்றனர். ஹிந்தி மொழியானது அவசியமென்றால் படிக்கும் மொழியாக தான் இருக்க வேண்டுமே தவிர அதை வற்புறுத்தக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனr.

இந்த நிலையில் பல அரசியல் தலைவர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய்யும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது நடிகர் விஜய் ஒரு சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஹிந்தி படிக்கலாம் அது இவர்களுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் படிக்க கூடாது என்று கூறுகிறார்கள் என்று இதுகுறித்து விஜய் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார் அண்ணாமலை.

அரசியல் சட்டத்தை கேள்விக்குறி ஆக்காதீர்கள்.. விகடனுக்கு ஆதரவாக விஜய்யின் குரல்.!

காலையில் இருந்தே விகடன் பத்திரிக்கை குறித்த செய்திதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரான ட்ரம்பை பார்ப்பதற்கு சென்றிருந்தார். அதே சமயம் அமெரிக்காவில் தொடர்ந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடி புகுந்த இந்தியர்களை வெளியேற்றி வருகின்றனர்.

அது குறித்து ஏற்கனவே பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மோடி இருக்கும் சமயத்திலும் கூட இந்த வெளியேற்றல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறார் என குறிப்பிடும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது விகடன்.

இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வராமலேயே விகடன் தளமானது முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட ரீதியில் பதிலளிப்போம் என விகடன் பக்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகரும். தா.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் விகடனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில், ”மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.” என கூறியுள்ளார் விஜய்.

களத்தில் விஜய் இறங்கியதுமே ஆடிப்போன அரசியல் களம்.. ஒரே நாளில் நடந்த சம்பவங்கள்.!

தளபதி விஜய்யின் அரசியல் வருகை என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. உலகம் முழுக்கவே நடிகர்கள்தான் அரசியல் வரலாற்றில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கூட நடிகர் எம்.ஜி.ஆர் அப்படிதான் அரசியலுக்கு வந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே மாதிரி டாப் நடிகராக இருந்து மக்கள் செல்வாக்கோடு அரசியலுக்கு  வருபவராக விஜய் இருந்து வருகிறார்.

விஜய் ஒரு நடிகர் என்பதால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பரந்தூரில் மக்கள் விமான நிலையம் வருவதற்கு எதிராக போராடி வருவதற்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்றுள்ளார்.

vijay

அங்கு விஜய் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக வைரலானது. இந்த நிலையில் அடுத்ததாக வேங்கை வயலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய். வேங்கை வயல் கிராமத்தில் குடி தண்ணீரில் மலம் கலந்த விவகாரம் இன்னமும் நிலுவையில்தான் இருந்து வந்தது.

இந்த நிலையில் இதுக்குறித்து விஜய் மக்களிடம் பேச உள்ளதாக கூறினார். இதற்கு நடுவே தற்சமயம் வேங்கை வயலில் மலம் கலந்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

விஜய் வேங்கை வயல் வருகிறேன் என கூறியவுடனேயே துரிதமாக இந்த செயல்பாடுகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் இதுக்குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

கட்சி குறித்து விஜய்யின் அதிரடி நடவடிக்கை..புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்க வைக்க காரணம்?.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது அரசியல் களம் என்பது சூடுப்பிடித்து வருகிறது. தொடர்ந்து விஜய்யும் கள பணியில் இறங்கி பல விஷயங்களை செய்து வருகிறார். போன வருட துவக்கத்தில்தான் விஜய் கட்சி துவங்குவதாகவே அறிவித்தார்.

ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே விஜய்யின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் அளவில் விஜய்யின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

அதே போல நடிகர் விஜய்யின் மாநாடு அவரது அரசியல் எண்ட்ரியில் முக்கிய மைல் கல்லாக மாறியது. அதன் மூலமாக இப்போது விஜய்க்கு ஆதரவாக பலர் மாறியுள்ளனர். தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராகதான் விஜய்யின் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

vijay

 

இந்த நிலையில் தற்சமயம் விஜய் தனது கட்சி குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்ந்தெடுப்பு நேற்று நடந்தது. த.வெ.க மாவட்ட நிர்வாகத்தை மொத்தமாக 120 ஆக பிரித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திற்கு கீழும் இரண்டு தொகுதிகள் இருக்கும் வகையில் இந்த அமைப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நடந்தப்போது புஸ்ஸி ஆனந்த்தை விஜய் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

கட்சியில் சிபாரிசு மற்றும் பணம் வாங்கி கொண்டு பதவிகள் கொடுக்கப்படுவதாக புரளிகள் கிளம்பியிருந்தன. அதை பொய் என நிரூபிக்கவே விஜய் அப்படி செய்ததாக ஒரு பக்கம் பேசப்படுகிறது.