நடிகை நயன்தாரா வாடகை தாய் முறை மூலமாக குழந்தை பெற்ற பிறகு இந்த வாடகை தாய் முறை என்பது மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
தொடர்ந்து பலரும் வாடகை தாய் முறையை அறிந்து கொள்வதற்கும் இந்த நயன்தாரா செய்த விஷயம் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் பெண் ஒருவர் செய்த ஊழல் தற்சமயம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழரசி என்கிற பெண் வாடகை தாய் முறையை தவறாக பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இது குறித்து விசாரிக்கும் பொழுது அவருக்கு திருமணமாகி இருந்து வந்த நிலையில் வறுமையில் இருந்திருக்கிறார் தமிழரசி.
இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த தம்பதி ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத காரணத்தினால் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். இதற்காக ஒரு இடை தரகர் பெண் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டு இருக்கின்றனர்.
அவர் தமிழரசியிடம் சென்று இது குறித்து பேசி இருக்கிறார். மேலும் இது சட்டரீதியாக சரியான விஷயம்தான் என்றும் நயன்தாராவே வாடகை தாய் முறை மூலம் தான் குழந்தை பெற்றுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.
நயன்தாராவே செஞ்சிருக்காங்க:
தமிழரசிக்கும் அந்த ஐந்து லட்சம் தேவையாக இருந்ததால் இந்த வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஒப்பு கொண்டிருக்கிறார் ஆனால் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சட்டம் 2021 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த சட்டத்தின் படி திருமணமான நான்கு வருடம் கழித்து தான் வாடகைத்தாய் முறையில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுவும் அந்த ஜோடிகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான தகுதி இல்லை என்கிற பட்சத்தில் தான் அதை செய்ய முடியும்.
வாடகை தாய் முறை மூலமாக இவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுப்பவர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருக்க வேண்டும் மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்க வேண்டும். அந்த வாடகைத்தாய் இவர்களது உறவினராக இருக்க வேண்டும்.
இத்தனை விதிமுறைகள் இருக்கின்றன இது எல்லாமே இங்கு இப்பொழுது மீறப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.