Tag Archives: vijaykanth

சிங்கத்தை சிதைத்த சிங்கப்பூர் சிகிச்சை.. விஜயகாந்துக்கு எதிராக சதி… அதிர்ச்சி கொடுத்த ராதா ரவி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் நல்ல மரியாதையை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் விஜயகாந்த் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். முக்கியமாக சாப்பாடு கிடைப்பதில் அவருக்கு நிறைய கஷ்டங்கள் இருந்தது.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த பொழுது விஜயகாந்துக்கு உணவு கிடைக்கவில்லை. அப்பொழுது விஜயகாந்த் ஒரு முடிவு செய்தார். பெரிய ஆளான பிறகு மூன்று வேலை சாப்பாடு போட வேண்டும் யார் என்னவென்று பார்க்காமல் அனைவருக்கும் போட வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதை இறப்பது வரை செய்து வந்தார் விஜயகாந்த். பிறகு அவரது குடும்பத்தார் இப்பொழுது அதை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பர்கள் என்று ஒரு சிலர் தமிழ் சினிமா வட்டாரத்தில் உண்டு.

vijayakanth

அதில் முக்கியமானவர் நடிகர் ராதாரவி. அவர் விஜயகாந்தின் இறப்பு குறித்து சில விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது விஜயகாந்த் சிங்கப்பூர் சிகிச்சைக்கு சென்று வந்த பிறகுதான் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

எனக்கு தெரிஞ்சு சிங்கப்பூர் சிகிச்சையில் அவருக்கு ஒழுங்காக சிகிச்சை அளிக்கவில்லை அல்லது தவறான சிகிச்சை அளித்திருக்க வேண்டும் அதனால் தான் அவரது உடல் பாதிக்கப்பட்டது. சிங்கம் போல் இருந்த விஜயகாந்த் சிங்கப்பூர் சென்று திரும்பி வந்த பொழுது ஆளே மாற்றமாக இருந்தார் என்று ஒரு புது தகவலை கூறியிருக்கிறார் இது பலருக்கும் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

நீங்க எதுக்காக அரசியலுக்கு வந்தீங்கன்னு தெரியும்!.. மாணவியின் கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த கேப்டன்!.

Captain Vijayakanth : தமிழக அரசியலும் சரி, நடிப்பு துறையிலும் சரி எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரிதாக கால் பதித்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவிற்கு நடிகராக அறிமுகம் ஆனப்போதே அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அதனை தொடர்ந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்தார் விஜயகாந்த். அதற்கு பிறகு விஜயகாந்த் நடிகர் சங்க தலைவரானார். சங்க தலைவரான பிறகு அவருடைய தலைமையில் சிறப்பாக முன்னேறியது நடிகர் சங்கம். அதற்கு பிறகு அரசியலுக்கு செல்ல வேண்டும் என நினைத்தார் விஜயகாந்த்.

இந்த நிலையில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்போது ஒரு மீட்டிங்கில் பேசும்போது அவரிடம் ஒரு மாணவி நேரடியாக ஒரு கேள்வியை கேட்டார். அதாவது அரசியலுக்கு நீங்கள் வந்ததே அதன் மூலம் பிரபலமடைவதற்காகதானா என்று கேட்டார் அந்த மாணவி.

vijayakanth-2

அதற்கு நிதானமாக பதிலளித்த கேப்டன், சினிமாவிலேயே நான் மிகவும் பிரபலமானவன். இனி அரசியலுக்கு வந்துதான் நான் பிரபலமாக வேண்டுமா?. மேலும் சினிமாவில் இருந்தப்போது என்னை அனைவரும் புகழ்ந்தார்கள் எனக்கு நிறைய நல்ல பெயர்கள் இருந்தன.

ஆனால் அரசியலுக்கு வந்தப்பிறகு என்னை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அரசியலுக்கு வந்தது எனது புகழுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு நன்மைகள் செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன். அதை நீங்கள் இப்போதே செய்யலாமே என நீங்கள் கேட்கலாம்.

அது உண்மைதான் இப்போது நான் நினைத்தால் என் சக்திக்கு ஒரு பத்து பேரை படிக்க வைக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் படிப்பில்லாமல் இருக்கும் அனைவரையும் என்னால் படிக்க வைகக் முடியாது. அதற்கு எனக்கு அதிகாரம் தேவை.

எனவேதான் நான் அரசியலுக்கு வர நினைக்கிறேன் என ஒரு சிறப்பான பதிலை அளித்துள்ளார் கேப்டன்.

கமல் படத்துல தக்காளி சோறு! – என் குழுவுக்கு கறி சோறு போடு, மாஸ் காட்டிய விஜயகாந்த்!

தமிழ் திரைத்துறையில் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் பெரும் மதிப்பு வரும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா துறையில் பலருக்கும் நன்மையை புரிந்த வாரி வழங்கியவர் நடிகர் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி இப்போது இருக்கும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது எனில் ஹீரோக்களுக்கு தனி சாப்பாடு,லைட்ஸ் மேன்களுக்கு தனி சாப்பாடு என்கிற நடைமுறைதான். ஹீரோக்களுக்கு நல்ல காஷ்ட்லியான சாப்பாடு கொடுப்பார்கள். கடைநிலை ஊழியர்களுக்கு சாதரண ஹோட்டல் சாப்பாடு வழங்கப்படும்.

தமிழ் சினிமாவில் அதை முதன் முதலாக அதை மாற்றி அமைத்தவர் நடிகர் விஜயகாந்த். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உணவுதான் தனக்கும் அளிக்கப்பட வேண்டும் என கூறி ஊழியர்களுடன் அமர்ந்து சாப்பாடு சாப்பிடுபவர் விஜயகாந்த்.

அதுவும் சாதரண சாப்பாடு கிடையாது. அசைவ உணவுதான் அனைவருக்கும் போட வேண்டும். அதுவும் அன்லிமிடெடாக போட வேண்டும் என கூறியிருந்தார். அந்த சமயத்தில் ஒரு இயக்குனர் சார் படமே லோ பட்ஜெட் இதுல எப்படி சார் தினமும் வேலை பாக்குறவங்களுக்கு அசைவ சாப்பாடு போட முடியும் என கேட்டுள்ளார்.

உடனே விஜயகாந்த் எல்லோருக்கும் அசைவ சாப்பாடு போட மொத்தமா எவ்வளவு ஆகும் என கேட்டுள்ளார். 3 லட்ச ரூபாய் ஆகும் சார் என கூறியுள்ளார் இயக்குனர். உடனே விஜயகாந்த் “அந்த மூணு லட்சத்த என் சம்பளத்துல கழிச்சிக்கோங்க” என கூறிவிட்டார்.

விஜயகாந்தின் உழவன் மகன் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் சென்றுக்கொண்டிருந்தபோது அதற்கு பக்கத்து ஷெட்டில் கமல்ஹாசன் நடிக்கும் நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டிருந்தன.

அப்போது நாயகன் படப்பிடிப்பு தளத்தில் வேலையாட்கள் அனைவரும் தக்காளி சாதமும், தயிர் சாதமும் சாப்பிட்டு கொண்டிருக்க விஜயகாந்த் ஷெட்டில் அனைவரும் கறி விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கின்றனர்.