Tag Archives: vinayak chandarasekaran

15 நாள்தான் டைம்..! வெங்கட் பிரபுவிற்கு புது ரூல் போட்ட சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்பொழுது கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் படங்களாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது.

sivakarthikeyan

தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அதற்கு முன்பு குட்நைட் திரைப்படத்தின் இயக்குனரான விநாயக் சந்திரசேகரனுக்கு திரைப்பட வாய்ப்பு கொடுப்பதாக கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு படம் முடியும் வரையில் விநாயக் சந்திரசேகரனை நிறுத்தி வைக்க முடியாது என்று யோசித்து சிவகார்த்திகேயன் இப்பொழுது ஒரு புது விதிமுறையை கொண்டு வந்துள்ளார்.

அதன்படி 15 நாட்கள் கால் ஷீட் வெங்கட் பிரபுவிற்கு கொடுக்கப்படுகிறது என்றால் அடுத்த 15 நாள் கால் ஷீட் விநாயக் சந்திரசேகரனுக்கு கொடுக்கப்படும். இப்படி இரண்டு இயக்குனர்களுக்குமே 15 நாட்கள் இடைவெளியில் கால்ஷீட் கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.