சினிமாவைப் பொறுத்தவரை நடிகையாக வேண்டும் என்று வரும் எல்லா நடிகைகளுமே பெரிய நடிகைகளாக ஆகி விடுவதில்லை. அவர்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகள் எல்லாமே சரியாக அமைந்தால் மட்டுமே ஒருவர் சிறந்த நடிகையாக மாற முடிகிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்று வந்து இறுதிவரை பெரிதாக கதாநாயகி ஆகாமல் இருந்து வருபவர்தான் நடிகை சோனா.
இருந்தாலும் கூட இப்பொழுதும் அவர் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்துதான் வருகிறார். தனக்கு மொத்தமாக சினிமா வாய்ப்பு போனதற்கு காரணமாக இருந்த திரைப்படம் குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது பத்துக்கு பத்து என்கிற ஒரு திரைப்படத்தில் நான் நடித்தேன். அதுதான் என் வாழ்க்கையே முடித்து விட்டது என்று கூறலாம் பத்துக்கு பத்து திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம் என்று தான் என்னிடம் கூறினார்கள்.
அதில் கவர்ச்சி காட்சிகளும் இருந்தன. அந்த கவர்ச்சி காட்சிகளை எனக்கு காட்டும் பொழுது அவ்வளவு மோசமாக காட்டவில்லை. ஆனால் படத்தில் அது வரும்பொழுது மிக மோசமாக இருந்தது.
இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாததால் எனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு படத்திற்கு போனேன் அந்த படத்தில் அந்த மோசமான காட்சிகளை பார்த்த பிறகு பல நாட்கள் எனது அம்மா என்னுடன் பேசாமல் இருந்தார் என்று அந்த விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகை சோனா.