Connect with us

பதினாறு வயதினிலே படத்துக்கு எழுதின துயர கதை!.. கதையை மாத்தலைனா பாரதிராஜா காலி!..

16 vayathinilea bharathiraja

Cinema History

பதினாறு வயதினிலே படத்துக்கு எழுதின துயர கதை!.. கதையை மாத்தலைனா பாரதிராஜா காலி!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமா இயக்குனர்களில் இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு அவரது காலகட்டத்திலேயே பெரும் வரவேற்புகள் இருந்தன. முக்கியமாக கிராமத்தில் உள்ள சாதாரண மனிதனை கதாநாயகனாக்கி திரைப்படம் எடுப்பதில் பாரதிராஜா திறமையான ஆள் என்று கூறலாம்.

இந்த நிலையில் பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் 16 வயதினிலே தனது முதல் திரைப்படத்தையே சோதனை ஓட்டமாக செய்தார் பாரதிராஜா. படத்தில் பெரிய சண்டை காட்சிகள் கமர்சியல் ஹீரோக்கள் என்று படத்தை எடுக்காமல் பெரும் நாயகனாக இருந்த கமலையே கோவணம் கட்ட வைத்து படத்தை எடுத்தார் பாரதிராஜா.

இந்த படம் நன்றாக ஓடுமா என்பது கேள்விக்குறியாக இருந்தபோதும் எந்தவித அச்சமும் இல்லாமல் தனது முதல் படத்தை பாரதிராஜா எடுத்தார். ஆனால் இந்த முதல் படத்தின் கதை முதன் முதலில் எழுதப்பட்ட பொழுதே மிகவும் சோகமான ஒரு கதையாக எழுதப்பட்டது.

அதன்படி டாக்டரால் கொடுக்கப்படும் ஸ்ரீதேவி பிறகு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அந்த நபர் ஆண்மை குறைவையின் காரணமாக குழந்தை கொடுக்கும் தகுதியை இழந்திருக்கிறார். இந்த நிலையில் கர்ப்பமாகிறார் ஸ்ரீதேவி, தனக்கு குழந்தை கொடுக்கும் பாக்கியமே இல்லாத பொழுது மனைவி எப்படி கர்ப்பமானால் என்னும் பொழுது அவர் செய்த தவறை அவரது கணவர் கண்டுபிடிக்கிறார்.

இதனை அடுத்து ஸ்ரீ தேவியை விவாகரத்து செய்து வீட்டிற்கு அனுப்புகிறார் அந்த கணவர். இதனால் அதிர்ச்சி அடையும் ஸ்ரீதேவியின் அம்மா தற்கொலை செய்து கொள்கிறார். இந்த நிலையில் கூலி வேலைக்கு சென்று தனது மகனை வளர்த்து வருகிறார் ஸ்ரீதேவி. இடையே ரஜினி ஸ்ரீ தேவியை கெடுக்க முயற்சிக்க அவரை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார் கமல்.

பிறகு வெகு வருடம் கழித்து கமல் வெளிவருகிறார். ஒருநாள் அந்த குழந்தைக்கு அப்பா யார் என்கிற கேள்வி வரும் பொழுது சப்பானியை அதற்கு அப்பாவாக கூறுகிறார் ஸ்ரீதேவி. இதோடு படம் முடிவதாக எழுதப்பட்டிருந்தது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த கதை மிகவும் துயரமான கதையாக உள்ளது. எனவே இதை மாற்றி அமையுங்கள் என்று கூறிய பிறகே திரையில் வெளியாகிய 16 வயதினிலே திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது.

POPULAR POSTS

rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
sundar c manivannan
To Top