Connect with us

நீ எப்படி அந்த மாதிரி செய்தி போடலாம்!.. ஆட்களோடு பத்திரிக்கையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாரதிராஜா!..

bharathiraja rangaraj pandey

Cinema History

நீ எப்படி அந்த மாதிரி செய்தி போடலாம்!.. ஆட்களோடு பத்திரிக்கையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாரதிராஜா!..

Social Media Bar

தமிழ் இயக்குனர்களில் மாறுப்பட்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் படங்கள் பலவும் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துக்களை பேசும் விதத்தில் இருக்கும்.

இதனாலேயே தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்கு என்று தனிப்பட்ட மரியாதை உண்டு. இப்போது வருகிற புது இயக்குனர்கள் கூட பாரதிராஜாவிடம் மரியாதையாக நடந்துக்கொள்வார்கள்.

இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை செய்தியால் பாரதிராஜா கடுப்பான சம்பவமும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. பத்திரிக்கையாளர்களில் கொஞ்சம் பிரபலமான பத்திரிக்கையாளராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. தற்சமயம் அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் அதற்கு முன்பு பத்திரிக்கை துறையில் முக்கிய ஆளாக இருந்தார்.

இலங்கையில் ஈழம் தொடர்பான பிரச்சனைகள் நடந்துக்கொண்டிருந்தப்போது தமிழ்நாட்டில் பல பிரபலங்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்படியாக பாரதிராஜாவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் பாரதிராஜா குறித்து ரங்கராஜ் பாண்டே பத்திரிக்கையில் எழுதும்போது அவரை குறித்து தவறாக எழுதிவிட்டார். இதனால் கோபமான பாரதிராஜா அவருடன் சேரன், ரமேஷ் கண்ணா என பெரும் பிரபலங்கள் கூட்டத்தையே அழைத்துக்கொண்டு பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

இதனை கண்டு ஆடிப்போன ரங்கராஜ் பிறகு அவர்களை அழைத்து சமாதானம் பேசியுள்ளார். இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

Source – link

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top