Cinema History
இங்கதான் என் வாழ்க்கையே ஆரம்பிச்சது? – இயக்குனரிடம் மாஸ் காட்டிய ரஜினி!
சினிமாவில் நடிப்பதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து சூப்பர் ஸ்டார் ஆனவர் நடிகர் ரஜினி. தமிழ் சினிமாவில் அதிகமான ஹிட் படங்கள் கொடுத்த ஒரு கதாநாயகனாக ரஜினி பார்க்கப்படுகிறார்.
ரஜினி ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் பூர்வீகம் கர்நாடகா. ஆனாலும் அப்போது அவர் தமிழ் திரையுலகிற்குதான் வாய்ப்பு தேடி வந்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பஸ் கண்டக்டராக இருந்தார் ரஜினி. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
2005 ஆம் ஆண்டு வெளியாகி ஒரு வருடம் ஓடி ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஒரு முறை டீம் அனைத்தும் சேர்ந்து பேருந்தில் சென்றுக்கொண்டிருந்ததாம்.
அந்த சமயத்தில் ரஜினி பேருந்தின் படிக்கட்டில் நின்றுக்கொண்டு ஆப்பிளை சாப்பிட்டு கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார். அதை பார்த்த வாசு, பிரபுவிடம் “அவரை உள்ளே கூப்பிடுங்க. ஒரே மழையா இருக்கு. படி வேற சறுக்கும் போல இருக்கு” என கூறினார் வாசு.
இதை காதில் வாங்கிய ரஜினி “என்ன வாசு பேசுறீங்க. என் வாழ்க்கை துவங்கினதே பஸ்லதான” என கூறி சிரித்துள்ளார். மேலும் கிட்டத்தட்ட பல மணி நேரம் நின்றப்படியே வந்தாராம் ரஜினி. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் இயக்குனர் வாசு கூறியுள்ளார்.