சினி துறையில் நடிகராக வலம் வந்த குற்றவாளி –  அதிர்ச்சியில் காவல்துறையினர்..!

சினிமா துறையை பொறுத்தவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். நடனம் ஆடுபவர்கள், சின்ன சின்ன கதாபாத்திரங்கள் என பல வகை கதாபாத்திரங்களில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவர்.

இப்படி நடிப்பவர்களை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கூறுவோம். இப்போது பெரும் நடிகர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்திருப்பர்.

இந்நிலையில் காவல் துறையினர் தேடி வந்த நபர் ஒருவர் சினிமா துறையில் வெகு காலங்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்திருக்கிறார்.

ஓம் பிரகாஷ் என்னும் இந்த நபர் மீது கொலை, கொள்ளை என பல வகை வழக்குகள் உள்ளன. 65 வயதையுடைய இவரை 30 ஆண்டு காலமாக போலீசார் தேடி வந்துள்ளனர்.

இந்த 30 ஆண்டு காலமும் இவர் சினிமா துறையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிப்புரிந்து உள்ளார். மேலும் சில பக்தி பாடல்கள் கூட இவர் பாடியுள்ளார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவ்வளவு வெளிப்படையாக இருந்தும் 30 ஆண்டுகளாக இவரை போலீஸ் எப்படி கண்டுப்பிடிக்காமல் இருந்தனர் என மக்கள் கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில் அவரை தற்சமயம் போலீஸ் கைது செய்துள்ளது.

Refresh