Cinema History
என் முதல் படம் ஓடாம போனதுக்கு சிம்புதான் காரணம்!.. ஸ்டேட்மெண்ட் கொடுத்த இயக்குனர்..
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்சமயம் பிரபலமாகி வருகிறார். இதற்கு முன்னர் இவர் இயக்கிய திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய படங்களாகவே இருந்துள்ளன.
சொல்ல போனால் அவரது திரைப்படங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திரைப்படங்களாகவே இருந்துள்ளன. இந்த நிலையில் மார்க் ஆண்டனிக்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் தோல்வியாக அமைந்த படம் ட்ரிபிள் ஏ.
இந்த படத்தில் நடிகர் சிம்புதான் கதாநாயனகனாக நடித்தார். படத்தின் கதையையே சிம்பு மாற்றிவிட்டார். அதனால்தான் படம் ஓடவில்லை என அந்த படத்தின் அனுபவம் குறித்து கூறியுள்ளார் இயக்குனர். மேலும் படப்பிடிப்பு துவங்கி சில நாட்களில் அவருக்கு படப்பிடிப்புக்கும் சரியாக வரவில்லை.
அதற்கு முன்பு எடுத்த காட்சிகளை எல்லாம் எப்படியோ சேர்த்து அந்த படத்தை இயக்கி முடித்தோம் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)