Latest News
உன்ன பார்த்தாலே பயமா இருக்குதுய்யா!.. படம் பார்த்த நடிகருக்கு பயம் காட்டிய வெற்றிமாறன்!.
தமிழில் முக்கியமான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களாகதான் கொடுத்து வந்தார்.
மக்களிடம் வசூல் சாதனை செய்யும் படங்களை இயக்க வேண்டும் என்பதை தாண்டி மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதே வெற்றிமாறனின் ஆசையாக இருந்தது. அவர் இயக்கிய விசாரனை, விடுதலை மாதிரியான திரைப்படங்களில் அவற்றை காண முடியும்.
இந்த நிலையில் விசாரனை திரைப்படம் குறித்த அனுபவத்தை நடிகர் ஆடுகளம் நரேன் கூறியுள்ளார். விசாரணை திரைப்படத்தை பார்த்தப்போது எனக்கு ஒரு வித பயம் வந்துவிட்டது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எப்படியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முற்றிலும் பாதுக்காப்பு இல்லாத சமூகமாக அல்லவா இருக்கிறது என தோன்றியது.
அதற்கு பிறகு வெற்றிமாறன் எனக்கு இரண்டு தடவை போன் செய்தார். ஆனால் அவரது போனையே நான் எடுக்கவில்லை. என் அலுவலகத்திற்கு வந்து ஒரு மணி நேரம் எனன் நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. ஒரு வித பயத்துடனேயே நான் இருந்தேன் என கூறுகிறார் நரேன்.
விசாரணை திரைப்படமானது நிஜமாகவே நடந்த காவல்துறையின் கொலையை பதிவு செய்யும் படமாக இருந்தது. அதனால்தான் நடிகர் ஆடுகளம் நரேனுக்கு அது அப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது.