அந்த சீன் எடுத்தப்ப விஜய் கை எரிஞ்சி போச்சி… லியோ படப்பிடிப்பில் நடந்த சம்வம்!..

விஜய் நடித்து தற்சமயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. லியோ திரைப்படத்திற்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தளபதி ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இருவருமே இந்த படத்திற்காக மரண வெயிட்டிங் என சொல்லலாம்.

இந்த நிலையில் படத்தின் டிக்கெட்டுகள் ஓப்பனாகி ஏற்கனவே  முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுல் ஃபுல் ஆகி விட்டது. இப்படியே போனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு ஓடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யும் இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது வெகுவாக சிரமப்பட்டுள்ளார். இதுக்குறித்து சாண்டி மாஸ்டர் ஒரு பேட்டியில் கூறும்போது லியோ திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யின் சட்டையில் நெருப்பு எரிய துவங்கும். உடனே அவர் அந்த சட்டையை கழட்டி போட வேண்டும்.

அந்த காட்சியை நிஜமாகவே படமாக்கினோம். அப்போது நெருப்பு எரியும் சட்டையை விஜய் கழட்டி கொண்டிருக்கும்போதே நெருப்பு அதிகரிக்க துவங்கியது இதனால் நெருப்பு அவரது கை பகுதியை சுட்டுவிட்டது. அதே போல காஷ்மீரில் நடுங்கும் குளிரில் கூட கஷ்டப்பட்டு நடித்துள்ளார் விஜய் என கூறினார் சாண்டி மாஸ்டர்.