சப்தம் எப்படி இருக்கு… படம் பார்த்தவங்க கொடுத்த விமர்சனம்!..

இயக்குனர் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் சத்தம். இதற்கு முன்பே அறிவழகன் இயக்கிய ஈரம் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு திரைப்படம் ஆகும்.

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களில் இருந்து ஈரம் திரைப்படம் வித்தியாசமானதாக இருந்தது. தற்சமயம் சப்தம் திரைப்படமும் அப்படியான ஒரு படமாக அமைந்திருக்கிறது.

ஈரம் திரைப்படத்தில் எப்படி அந்த பேய் தண்ணீரை வைத்து அனைவரையும் பழிவாங்குகிறதோ அதே போல இந்த திரைப்படத்தில் சப்தம் மூலமாக தான் பழிவாங்குகிறது. இந்த படம் திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன.

அதேபோலவே இந்த படமும் அமைந்திருக்கிறது. தற்சமயம் முதல் காட்சியை பார்த்த படத்தை பார்த்தவர்கள் கூறும் பொழுது படத்தில் சத்தம் தொடர்பான விஷயங்களில் நிறைய வேலை பார்த்து இருக்கின்றனர். சிறப்பாக இருக்கிறது இதுவரை பார்த்த பேய் படங்களில் இருந்து இந்த படம் வித்தியாசமானதாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.

இன்னும் சிலர் கூறும் பொழுது படம் அதிகம் த்ரில்லாக இல்லை ஆனால் படத்தின் கதை சிறப்பானதாக இருந்தது என்று கூறி இருக்கின்றனர். ஆனால் சிலர் கூறும் பொழுது அதிக சத்தம் காதுகளில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது காது வலி ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டியும் இருக்கின்றனர்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version