அஜித்துக்கு கிடைச்ச மாதிரி ரசிகர்கள் அமையுறது கஷ்டம்.. இப்படி ஒரு விஷயம் நடந்ததா? - Cinepettai

அஜித்துக்கு கிடைச்ச மாதிரி ரசிகர்கள் அமையுறது கஷ்டம்.. இப்படி ஒரு விஷயம் நடந்ததா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானவர். பெரும்பாலும் நடிகர்கள் எல்லாம் தங்களது ரசிகர்களை தக்க வைத்து கொள்வதற்காக பல விஷயங்களை செய்வதுண்டு. ஆனால் அஜித் அப்படியான எந்த விஷயங்களையும் செய்வது கிடையாது.

அஜித் தனக்கென்று ரசிகர் மன்றங்களை அமைப்பதற்கு கூட அனுமதி வழங்கவில்லை. இப்படியான நிலையிலும் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் அஜித் தனது ரசிகர்களுக்காக பல விஷயங்களை செய்தார்.

பொதுவாகவே நடிகர்கள் வயதாக துவங்கிய பிறகு தொடர்ந்து சினிமாவில் தங்களை இளமையாக காட்டிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள். அந்த வகையில் ஒப்பனை செய்வது டை பயன்படுத்துவது போன்றவற்றை செய்வார்கள்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தனது ரசிகர்களுக்காக பில்லா, ஜி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் டை பயன்படுத்தினார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் அப்படி டை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்,

கதைக்கு தேவை என்றால் மட்டும் டையை பயன்படுத்துவார். மற்றப்படி வெள்ளை முடியோடேயே நடிக்க துவங்கினார் அஜித். ஆனாலும் அதற்காக அஜித் ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை. எனவே அஜித்துக்கு கிடைத்த மாதிரி ரசிகர்கள் எல்லோருக்கும் கிடைத்துவிடாது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version