சரக்கை போட்டு மட்டையான இயக்குனர்? – படத்தை தனியாக எடுத்த சிவக்குமார்!

தமிழ் சினிமா இப்போது இருப்பது போல முன்னர் இல்லை. 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் விஜய், சூர்யா மாதிரியான பெரிய நடிகர்கள் மேடையில் ஆடுவதை பார்க்க முடியும். ஆனால் இப்போது சின்ன நடிகர்கள் கூட அப்படியெல்லாம் ஆடுவது இல்லை. 20 வருடங்களிலேயே இவ்வளவு மாற்றம் என்றால் அதற்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்.

நடிகர் சிவக்குமார் நடித்த காலக்கட்டங்கள் வேறு மாதிரியாக இருந்தாலும் அப்போதும் கதாநாயகர்களுக்கு தனி கெத்து இருக்கதான் செய்தது. ஆனால் எங்கு சென்றாலும் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பவர் நடிகர் சிவக்குமார்.

அப்போது ஒரு பிரபல இயக்குனர் நடிகர் சிவக்குமாரை வைத்து படம் இயக்கி கொண்டிருந்தார். அன்று அதிகாலையிலேயே சூரியன் உதிக்கும் நேரத்தில் படப்பிடிப்பை நிகழ்த்த வேண்டும். அதற்காக வழக்கம் போல சிவக்குமார் வெகு சீக்கிரமே கிளம்பி தயாராக இருந்தார். படக்குழுவில் உள்ள அனைவரும் வந்துவிட்டனர்.

ஆனால் இயக்குனர் மட்டும் வரவில்லை. என்ன என்று அதுக்குறித்து விசாரிக்கும்போது முதல் நாள் முழுவதுமாக குடித்துவிட்டு இயக்குனர் தூங்கிவிட்டார் என்பது சிவக்குமாருக்கு தெரிந்தது. எனவே அவரை எழுப்புவது என்பது நடக்காத காரியம்.

மற்ற கதாநாயகர்களை போல கோபப்படாமல் தயாரிப்பாளர் பணம் வீணாக போய்விடுமே என யோசித்த சிவக்குமார், படக்குழுவை அழைத்து அவரே அந்த காட்சியை படமாக்கினார். இதை வைத்தே அப்போதைய சினிமாவிற்கும் இப்போதைய சினிமாவிற்கும் இடையே வேறுப்பாட்டை பார்க்க முடியும்.

Refresh