நடிகர் ஸ்ரீ காந்த் திடீரென கைது.. தோண்ட தோண்ட வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் அந்த சமயங்களில் பட்டி தொட்டி எங்கும் ஓடி ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் ஸ்ரீகாந்த்.

அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சில ஆக்‌ஷன் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்த போட்டியின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கின.

அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திற்கு வாய்ப்புகளும் குறைந்தன. பிறகு நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஸ்ரீகாந்த் நண்பனாக நடித்தும் கூட அதற்கு பிறகும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்ததாக ஸ்ரீ காந்த் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கு நடுவே அவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஸ்ரீகாந்த் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் மதுபான விடுதி மோதல் வழக்கில் கைதான பிரசாத் என்பவர்தான் ஸ்ரீகாந்திற்கு கொக்கைன் என்னும் போதை மருந்தை கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.