செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்கு.. நடிகை ஆண்ட்ரியாவின் கலக்கல் போட்டோஸ்

தென்னிந்திய சினிமாவில் நடிகையாகவும், பின்னணி பாடகி ஆகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தன்னுடைய வாழ்க்கையை பின்னணி பாடகியாக தொடங்கிய ஆண்ட்ரியா, அதன் பிறகு பல படங்களில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா சென்னையில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவராவார். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். இவரின் தங்கை பெல்ஜியத்தில் துணை ஆய்வாளராக இருக்கிறார்.

இவருடைய தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். தன்னுடைய படிப்பை சென்னையில் முடித்த ஆண்ட்ரியா, கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு குழுவில் பாடி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். கல்லூரி மேடையில் நாடகத்திலும் நடித்திருக்கிறார்.

andrea

இந்நிலையில் தான் திரைப்படங்களில் பாடல்களை பாடுவதை தொழிலாக செய்து வந்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடல் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமார் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. பிறகு அஜித்துடன் மங்காத்தா, கமல்ஹாசன் உடன் விஸ்வரூபம், வடசென்னை ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆண்ட்ரியா

பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றமாகவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த ஆண்ட்ரியா பல படங்களில் மாடனாகவும், கவர்ச்சியாகவும் நடிக்க தயங்குவதில்லை.

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆண்ட்ரியாவா இது என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு ஆண்ட்ரியா ஸ்டைலாகவும், மாடர்ன் ஆகவும், அழகாகவும் இருப்பதாக அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதோடு புகைப்படங்களை லைக் செய்தும், மற்ற ரசிகர்களுக்கு ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version