எல்லா எடத்துலையும் என் பின் தொடர்ந்து வந்து.. ஜீவா நடிகை மீது ஆசைக்கொண்ட சில்வண்டு ரசிகர்.. கடுப்பான நடிகை.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஹனி ரோஸ். இவர் பாலகிருஷ்ணா மாதிரியான தெலுங்கில் உள்ள முண்ணனி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

அதே போல மலையாளம், தமிழ் என மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் திரைப்படங்களில் இவருக்கு வழங்கப்படும் கதாபாத்திரம் கவர்ச்சியான கதாபாத்திரமாகவே இருக்கும்.

எனவே கவர்ச்சி நடிகையாக இவர் மிகவும் பிரபலமானவர் என கூறலாம். இந்த நிலையில் தொடர்ந்து ஒரு நபர் இவருக்கு தொல்லை கொடுத்து வந்தது குறித்து தற்சமயம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஹனி ரோஸ்.

அதில் அவர் கூறும்போது ஒரு வி.ஐ.பி சில்வண்டு ஒன்று என் மீது ஆசை கொண்டு என்னை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் நான் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நான் செல்லும் நிகழ்ச்சிக்கெல்லாம் வந்தார் அந்த நபர்.

மேலும் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்தார். இதை பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலாகவே நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் அவரை நான் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவராகவே கருதினேன்.

எனவே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் இப்போது அப்படி விடுவதாக இல்லை என கூறியுள்ளார்.