கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போதை விடவும் ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டங்களில் வாய்ப்பு வாங்குவது கடினமான விஷயமாக இருந்தது. அதிகப்பட்சம் நாடக துறையில் இருந்தவர்களுக்கே எளிதாக வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும் நாடக துறையில் இல்லாமல் திறமையால் மட்டுமே சினிமாவிற்கு வெகு சிலரும் இருந்தனர். அப்போது பாலிவுட் சினிமாவில் நடிகையாவதற்கு முயற்சித்து வந்தார் நடிகை லெட்சுமி. ஆனால் பாலிவுட்டில் ஏற்கனவே நடிகைகளுக்கு அதிக போட்டி நிலவி வந்தது.

இதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தார் லெட்சுமி. தமிழ் சினிமாவிற்கு இவர் நடிக்க வந்தப்போது அப்போதிருந்த ஒரு கேமிராமேன் அவரை கேவலமாக பேசியுள்ளார். இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வந்தார் லெட்சுமி.

அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வர துவங்கின. அவரை கேவலமாக பேசிய அந்த கேமிரா மேன் பிறகு அவரது பல படங்களில் கேமிரா மேனாக பணிப்புரிந்தார். இந்த நிலையில் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் என்கிற புத்தகத்தை படமாக்க திட்டமிட்டனர்.

அந்த படத்தின் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு ஜெயலலிதாவை நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு ஜெயகாந்தன் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த கதாபாத்திரத்தில் லெட்சுமி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என கூறி அவரை நடிக்க வைத்தார். அந்த அளவிற்கு சினிமாவில் உச்சத்தை பெற்றார் லெட்சுமி.