எனக்கு புடிச்ச மாதிரிதான் நடிப்பேன். தயாரிப்பாளருக்கு செலவை இழுத்து விட்ட நயன்தாரா.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் நயன்தாரா.

பொதுவாகவே நடிகைகளை பொறுத்தவரை நடிகர்கள் அளவுக்கு இவர்களுக்கு மார்க்கெட் என்பது கிடையாது. எனவே தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகைகள் நிறையவே போராட வேண்டி இருக்கிறது.

நடிகர்களுக்கு இருப்பது போல பெரிய ரசிகர்களோ ரசிகர் மன்றமோ நடிகைகளுக்கு கிடையாது. அதனால் நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் கூட அதைக் கேட்பதற்கு ஆள் இல்லை.

இந்த ஒரு நிலையிலும் தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்து பல வருடங்களாக முக்கிய நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. ஆனால் அதே சமயம் சமீப காலமாக நயன்தாரா குறித்த நிறைய எதிர்மறையான விஷயங்கள் சினிமாவில் பரவி வருகின்றன.

முக்கியமாக படப்பிடிப்புகளின் பொழுது நயன்தாரா செய்யும் நிறைய விஷயங்கள் தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு படத்தில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த பொழுது அவர் ஊட்டிக்கு சென்று சில காட்சிகளை நடிக்க வேண்டி இருந்தது.

ஆனால் அவர் சென்னையை விட்டு வருவதற்கு மறுத்துவிட்டார் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய நயன்தாரா ஊட்டி போலவே சென்னையில் செட்டு போட்டு படப்பிடிப்பை நடத்துமாறு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அதனால் தயாரிப்பாளர் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார் என்று இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன். இப்படியே நயன்தாரா செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.