நான் சினிமாவை விட்டே போகணும்னு ஆசைப்படுறிங்களா? – வேதனைப்பட்ட ராஷ்மிகா!

சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்து தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மாறி மாறி நடித்து வருகிறார்.

தற்சமயம் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க துவங்கியதில் இருந்து அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

ஏற்கனவே இதுக்குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எப்போதும் அவரை எதிர்மறையாக பேசுவதை கண்டித்து அதில் பேசியிருந்தார். ஆனாலும் ராஷ்மிகாவை விமர்சனம் செய்வது ஓய்ந்தப்பாடில்லை.

இதற்கிடையே ஒரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா. “எப்போதும் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றனர். உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி இருக்கிறேன் என்கின்றனர். இல்லை எனில் குண்டாக இருக்கிறேன் என கூறுகின்றனர். நான் சினிமாவை விட்டே விலக வேண்டும் என நினைக்கிறார்கள் போல? உங்கள் வார்த்தைகள் என்னை மிகவும் புண்படுத்துகின்றன” என கூறியுள்ளார்.

Refresh