நடிகர் சிம்பு நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் வல்லவன். வல்லவன் திரைப்படம் வந்ததற்கு பிறகு பள்ளி மாணவர்கள் பலரும் சிம்புவின் ரசிகர்களாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அந்த படம் குறித்த அனுபவங்களை சமீபத்தில் நடிகை சந்தியா பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது வல்லவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முக்கியமான காரணமே கதைதான்.

அவர்கள் முதன்முதலாக என்னை தேர்ந்தெடுக்கும் பொழுது சொன்ன கதை ஒன்றாக இருந்தது அந்த கதை பிடித்து போய் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அதற்குப் பிறகு கதை மாறி கடைசியில் படமாக எடுக்கப்பட்ட கதை வேறாக இருந்தது. அந்த கதையிலிருந்து திரைப்படமாக திரையில் வந்தது வேற ஒரு கதையாக இருந்தது என்று வல்லவன் திரைப்படம் குறித்து கூறியிருக்கிறார் சந்தியா எனவே சிம்பு வீட்டில் சொன்ன கதை ஒன்று கடைசியில் நடந்தது ஒன்று என்பதாக மன்மதன் பட அனுபவம் அமைந்து விட்டதாக சந்தியா கூறியுள்ளார்.