தமிழ் சினிமா பிரபலங்களில் முக்கியமான நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் ஜீவா சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஆர் பி சௌத்ரியின் மகன் தான் ஜீவா.
இருந்தாலும் கூட தன்னுடைய எந்த செல்வாக்கையும் பயன்படுத்தாமலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஜீவா வளர்ச்சியை கண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஜீவா குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் தமிழ் பிரபலம் சுச்சித்ரா.
தற்சமயம் மலையாளத்தில் பெண்களுக்கு நடந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. கேரளாவை சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் இதில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்கள்:
இந்த நிலையில் அவர்கள் மீது சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே இது குறித்து பேசிய சுசித்ரா கூறும் பொழுது தொடர்ந்து இந்த விஷயங்களில் ஆண்களை மட்டுமே குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பெண்கள் எத்தனை பேர் இதே விஷயங்களை செய்கிறார்கள் என்று யாரும் பேசுவது கிடையாது. உதாரணத்திற்கு நடிகர் ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பெண்கள் எல்லாம் ஒரு விருது வழங்கும் விழாவில் ஜீவாவை தொடர்ந்து தொல்லை செய்ததால் அவர் அவர்களுக்கெல்லாம் பயந்து பாத்ரூமில் சென்று ஒளிந்து கொண்டார்.
பிறகு என்னிடம் வந்து அது குறித்து கூறி அவர் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். அந்த அளவிற்கு நடிகர்களுக்கும் இங்கே நடக்கிறது பல பெண்கள் அவர்களின் ரசிகர்கள் என்று கூறிவிட்டு ஒரு இரவுக்கு அந்த நடிகர்களை அழைப்பது உண்டு. சில என்.ஆர்.ஐ பெற்றோர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தன்னுடைய மகளுடன் ஒருநாள் இருக்கும்படிநேரடியாகவே கேட்பதும் உண்டு.
இப்படியான தொல்லைகள் எல்லாம் நடக்கின்றன சில நடிகர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால் நிறைய நடிகர்கள் அதை ஏற்றுக் கொள்வது கிடையாது என்று கூறியிருக்கிறார் சுசித்ரா.