ஈஸ்வரியை ஓங்கி அறைந்த குணசேகரன்!.. திடீரென டிவிஸ்ட் அடித்த எதிர்நீச்சல்..
தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சீரியல் தொடர்களின் முக்கியமான தொடராக எதிர்நீச்சல் நாடகம் உள்ளது பொதுவாக நாடகங்களில் சாமி சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்று ஒரே மாதிரியாக சென்று கொண்டிருக்கையில் எதிர்நீச்சல் நாடகத்தில் மட்டும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் கிளம்புவதாக நாடகத்தை எடுத்துள்ளனர்.
பொதுவாக நாடகங்களில் பெண்கள்தான் வில்லியாக இருப்பார்கள் ஆனால் எதிர்நீச்சலில் ஆண்கள்தான் வில்லன்களாக இருக்கின்றனர். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு. தற்சமயம் அதில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து இறந்த காரணத்தினால் நடிகர் வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
இது மேலும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஆதி குணசேகரன் திரும்ப வீட்டிற்கு வருவதாக காட்சிகள் அமைந்தது அதற்கு பிறகு தன் மனைவியை தலை முழுகிய ஆதி குணசேகரன் வீட்டிற்குள் சென்றதும் தன் தம்பியை அடித்ததற்காக ஈஸ்வரியை ஓங்கி அறைந்தார்.
வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக வந்த உடனே காட்சிகளில் மாறுபாடுகள் தெரிகின்றது. இதற்கு முன்பு ஆதி குணசேகரன் தன் மனைவியை அடிப்பது போன்ற காட்சிகளே வந்தது கிடையாது. எனவே இதுவரை பெண்கள் கை ஓங்கி இருந்த எதிர்நீச்சல் நாடகத்தில் அடுத்து ஆதி குணசேகரனின் கை ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.