தற்போது விஜய் ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகி அவரின் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்னதாக படத்தின் பாடல் வெளிவந்த போது அதில் இளம் வயதாக தோன்றும் விஜயை அனைவரும் ட்ரோல் செய்து வந்த நிலையில் அது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் இளம் விஜய்யின் தோற்றத்தை தொழில்நுட்பம் கொண்டு சரி செய்யப்பட்ட நிலையில் படத்தின் டிரெய்லர் காட்சி வெளியிடப்பட்டு தற்போது ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு கோட் படத்தை பற்றி அஜித் சொன்ன தகவலை தற்போது செய்தியாளர்களிடம் பகிர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜயின் கோட் திரைப்படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அஜித் ரசிகர்களும் படம் எவ்வாறு இருக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் விஜய் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க போகும் நேரத்தில் இறுதியாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரின் மத்தியிலும் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் இளமை தோற்றத்தில் தோன்றுகிறார்.
கோட் படத்தை பற்றி அஜித் கூறிய தகவல்
படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில், நடிகர் அஜித் படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு பாராட்டி, உனக்கும் விஜய்க்கும் நல்லா செட் ஆயிருக்கு டா.. விஜய்க்கும் பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடு என்று மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களையும் குஷி படுத்தி உள்ளது.
இந்நிலையில் கோட் படத்தின் டிரெய்லரில் மங்காத்தா படத்தில் வரும் “சத்தியமா இனி குடிக்க கூடாது டா” என்ற வசனத்தை விஜய் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.