Connect with us

அஜித் கொடுத்த நெருக்கடியால் வாழ்க்கையை இழந்த இயக்குனர்!.. 10 வருஷ வாழ்க்கையே போச்சு!..

ajithkumar

Cinema History

அஜித் கொடுத்த நெருக்கடியால் வாழ்க்கையை இழந்த இயக்குனர்!.. 10 வருஷ வாழ்க்கையே போச்சு!..

cinepettai.com cinepettai.com

Actor Ajith: தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து சின்ன இயக்குனர்கள் படம் இயக்குவது என்பது ஒரு வகையில் கஷ்டமான ஒரு விஷயமாகும். ஏனெனில் படத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கதையில் மாற்றத்தை செய்ய பெரும் நடிகர்களுக்கு அதிகாரம் உண்டு.

அதுவும் சின்ன இயக்குனர் எனும் பொழுது மிக எளிதாகவே நடிகர்கள் அவர்களுக்கு பிடித்தார் போல கதையை மாற்றி விடுவார்கள். இப்படி கதையை மாற்றும் பொழுது அது படத்தின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ajith
ajith

இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இயக்குனராகதான் இருக்கும். ஏனெனில் அந்த நடிகர்கள் பெரிய கதாநாயகர்கள் என்பதால் அடுத்து அவர்களுக்கு எளிதாகவே வாய்ப்புகள் கிடைத்துவிடும். இப்படி தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தால் ஒருவர் வாய்ப்பை இழந்த சம்பவம் நடந்திருப்பதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு செல்லா என்கிற இயக்குனர் அஜித்தை வைத்து ஆழ்வார் என்கிற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் அப்போது வெளியாகி பெரும் தோல்வியை கண்டது. அந்த சமயங்களில் எல்லாம் விஜய் அஜித்தின் சில படங்கள் சில சமயங்களில் சுத்தமாக ஓடாமல் தோல்வியை கண்டுவிடும்.

இயக்குனருக்கு வந்த சங்கடம்:

அப்படியாக ஆழ்வார் திரைப்படம் தோல்வியை கண்டது. அதற்கு காரணம் என்ன என்று பத்திரிகையாளர் பிஸ்மி கூறும் பொழுது அந்த திரைப்படத்தின் 70% படப்பிடிப்பைதான் அப்போது இயக்குனர் முடித்து இருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அஜித் சரியாக ஒத்துழைக்கவில்லை.

தயாரிப்பாளரும் இந்த படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று இயக்குனருக்கு தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டார். இந்த இருவரின் நெருக்கடியால் வேறு வழி இல்லாமல் படத்தை எடுத்த வரை அப்படியே கொண்டு வந்து எடிட் செய்து முழு படம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.

இதனால்தான் அந்த திரைப்படம் வெளியான பொழுது பெரும் வரவேற்பை பெறவில்லை. ஆனால் இதனால் அந்த தயாரிப்பாளரோ அல்லது அஜித்தோ பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இயக்குனர் செல்லாவிற்கு அடுத்து 10 வருடத்திற்கு சினிமாவில் எந்த படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பத்து வருடங்களுக்கு பிறகே சிலுக்குவார்பட்டி சிங்கம் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top