News
நமக்குள்ள சண்ட வேணாம்..! தனித்தனியா ரிலீஸ்! – ஸ்டார் படங்கள் Release dates!
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. முதலாவதாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 வெளியாக உள்ளது.
அதை தொடர்ந்து அஜித்குமாரின் “AK61”, விஜய்யின் “Thalapathy 66”, ரஜினிகாந்த் நடித்து வரும் “தலைவர் 169” உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இந்த படங்களில் பொன்னியின் செல்வன் தவிர எல்லாம் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. படம் எடுப்பதை விட முக்கியமானது அதை சரியான நாளில் ரிலீஸ் செய்வது.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றாலே நல்ல பண்டிகை நேரத்தில், விடுமுறை நேரத்தில்தான் ரிலீஸ் செய்வார்கள். தற்போது அடுத்தடுத்து தமிழின் பெரிய ஸ்டார் நடிகர்களின் படம் வெளியாவதால் ஒரே சமயத்தில் வெளியிடாதவாறு ரிலீஸ் தேதி ப்ளான் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொன்னியின் செல்வன் 1 படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. தொடர்ந்து அஜித்குமாரின் AK61 இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அடுத்து தளபதி 66 அடுத்த ஆண்டு 2023 பொங்கலில் வெளியாகிறது. அதை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 169 அடுத்த ஆண்டு 2023 கோடை விடுமுறை சமயத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெரிய பட்ஜெட் படங்களை நீண்ட இடைவெளிவிட்டு வெளியிடுவதால் வசூல் பாதிக்காது என்பதோடு, சின்ன பட்ஜெட் படங்களும் இடையே வெளியிட வாய்ப்பு கிடைக்கும்.
