எனக்கு பொன்னியின் செல்வன் வேணும்.. அடம்பிடித்த அமேசான்! – மணிரத்னம் எடுத்த முடிவு!

மணிரத்னம் இயக்கத்தில் பிரபல நடிகர், நடிகைகள் நடித்து உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் “பொன்னியின் செல்வன்”

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட கால கனவாகும். கார்த்தி, ஜெய்ராம், ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதல் பாகமான பொன்னியின் செல்வன் – 1 செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் தீவிர ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களை விட இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க அமேசான் ப்ரைம் தீவிரமாக காத்திருந்தது. இதற்காக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்த அமேசான் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து Post Theatrical Streaming உரிமத்தை ரூ.125 கோடிக்கு வாங்கியுள்ளது.

Refresh