தமிழ் சினிமாவில் தற்போது பல படங்கள் வெளிவந்து கொண்டு இருந்தாலும் ஒரு சில படங்கள் தான் குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி அடைகிறது.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்த போதும் அவர்களுக்கு பல ரசிகர் பட்டாளங்கள் இருந்த நிலையிலும், அவர்களின் படங்கள் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றி அடையவில்லை.
என்ன தான் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் படத்தின் கதையில் ரசிகர்களுக்கு திருப்தி இல்லை என்றால் அந்த படம் வெற்றி அடையாது என்பதற்கு உதாரணம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
124 படங்களில் வெற்றி பெற்ற 8 படங்கள்
தமிழ் சினிமாவில் தற்போது பல படங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், ரசிகர்களை கவரும் விதத்தில் எந்த ஒரு படங்களும் எடுக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக அமைந்து வருகிறது.
அதற்கு உதாரணமாக தற்போது வரும் எந்த ஒரு படங்களுமே 50 நாட்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதாக நாம் எங்கும் கேள்விப்படவில்லை. இந்நிலையிலிருந்து என்ன புரிகிறது என்றால் எந்த ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும், படத்திற்கு நல்ல கதை அமைந்திருந்தால் நிச்சயம் அந்த படம் வெற்றி அடையும்.
மேலும் சமீப காலமாக படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தங்களின் சொந்த கருத்துக்களை படங்களில் திணிப்பதால் படத்தின் கதையை திசை திருப்பும் விதத்தில் அமைந்திருப்பதாலும், மேலும் குறிப்பிட்ட சில விடயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு படங்கள் தொடர்ந்து வெளிவருது, கதை நன்றாக இருந்தாலும், மக்களுக்கு எளிதாக புரிய வைக்காமல் விட்டுவிடுவது என பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. நடிகர்கள், நடிகைகள் என்ன தான் அந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் படத்தின் கதை மக்களைச் சென்றடையவில்லை என்றால் நிச்சயம் அந்த படத்திற்கு பெரும் இழப்பாக இருக்கும்.
இந்நிலையில் தான் இந்த வருடம் 124 படங்கள் வெளிவந்து அதில் எட்டு படங்கள் மட்டுமே வெற்றி அடைந்ததாக தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்துள்ள பேட்டியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்துள்ள பேட்டி
இந்த வருடம் 124 படங்கள் வெளிவந்திருக்கிறது அதில் வெற்றியடைந்த படமாக, அரண்மனை 4, மகாராஜா, கருடன், பிடி சார், ரோமியோ, லவ்வர், ப்ளூ ஸ்டார் ஆகிய திரைப்படங்கள் தான் வெற்றி அடைந்திருக்கிறது என தொகுப்பாளர் கேட்க, அதற்கு ஞானவேல் ராஜா தற்போது மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் வெற்றி அடைந்தது.
இதில் எப்போதும் ஆடியன்ஸை நாம் குறை சொல்ல முடியாது. ஆடியன்ஸ் நல்ல கதை கொண்ட படங்களை பார்ப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இதில் இயக்குனர்களாகிய நாம் ஒரு நல்ல கன்டென்ட் கொடுக்காததால் படம் தோல்வியடைகிறது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.
ஒரு படத்தை தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் பட்ஜெட்டை விட அந்த படம் அதிக வசூலை பெற்றால் அந்த படம் ஹிட் என்று கூறுகிறோம். மேலும் படம் வெற்றி அடைவதற்கு கதை முக்கிய காரணமாக உள்ளது என ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார்.