Cinema History
எவ்வளவு கெஞ்சினாலும் அந்த பாட்டுக்கு மியுசிக் போட முடியாது… ஸ்ட்ரிக்டாக மறுத்த அனிரூத்..!
தமிழ் சினிமாவில் உள்ள டாப் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் அனிரூத். அனிரூத் இசையமைக்கும் பாடல்கள் முக்கால்வாசி டாப் ஹிட் கொடுக்கக்கூடியவை.
இதனாலேயே ரஜினிகாந்த், கமல் உட்பட பலரும் அனிரூத் தனது திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதிலும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு அனிரூத்தின் இசை அதிரி புதிரி ஹிட் கொடுத்தது.
தற்சமயம் லியோ படத்திற்கும் அனிரூத்தான் இசையமைத்து வருகிறார். அடுத்து ரஜினிகாந்த் ஞானவேலுடன் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கும் அனிரூத்தை இசையமைக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
அனிரூத் பிரபலமான பிறகு ஒரு சமயம் அவருக்கு ஐ.பி.எல் மேட்ச்சுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் டீமிற்கு இசையமைப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதை அனிரூத் மறுத்துவிட்டார். இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறும்போது சென்னை சூப்பர் கிங்ஸிற்கு ஏற்கனவே ஒரு இசை உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க என்கிற அந்த பாடலை விட சிறப்பாக ஒரு பாடலை என்னால் இசையமைக்க முடியாது. மேலும் நானே அந்த பாடலுக்கு பெரும் ரசிகன்.
ரஜினிகாந்திற்கு எப்படி அண்ணாமலை படத்தில் வரும் தீம் மியூசிக் பிரபலமானதாக இருக்கிறதோ அதே போல சி.எஸ்.கே விற்கு இந்த பாடல்தான் ஐகான் என கூறியுள்ளார்.