All posts by Tom

பீஸ்ட் படத்திற்கு கத்தாரில் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியாகும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் பீஸ்ட் படத்திற்கு ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் கத்தாரில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக குவைத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கத்தாரிலும் தடை செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணாச்சியின் ஆட்டம் ஆரம்பம்! வைரலாகும் மொசலு மொசலு பாடல்!

அருள் சரவணன் நடித்து வெளியாகவுள்ள லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் லெஜண்ட். இந்த படத்தில் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் படங்களுக்கு இசையமைத்து நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தில் இசையமைப்பது அவருக்கு கம்பேக்காக இருக்கலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் நேற்று லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “மொசலு மொசலு” பாடல் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த முதல் சிங்கிள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 9 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன், 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது. மேலும் இசை கேட்டகரியில் இந்த பாடல் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

போலீஸே இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறாங்களா? – டாணாக்காரன் விமர்சனம்!

விக்ரம் பிரபு நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள டாணாக்காரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரம் பிரபு நடித்து தமிழ் இயக்கி வெளியாகியுள்ள படம் டாணாக்காரன். இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் முந்தைய படங்கள் அவ்வளவு நல்ல வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

1990களிம் நடக்கும் கதை. காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சியில் உள்ளவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம், சுரண்டல், சாதிய பாகுப்பாட்டை மையப்படுத்திய கதைகளம். ராமநாதபுரத்தை சேர்ந்த அறிவழகன் (விக்ரம் பிரபு) காவலராகும் கனவுடன் பயிற்சி படையில் சேர்கிறான். அதே பயிற்சி பள்ளியில் 1984ல் காவலர் பணிக்கு தேர்வாகியும் பல்வேறு அரசியல் குழப்பங்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் போன 300க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சிக்கு வருகிறார்கள்.

அங்கு பயிற்சி அளிக்கும் காவலர்களில் அதிகார செருக்கு மிக்கவராக இருப்பவர் ஈஸ்வர மூர்த்தி (லால்). இது போதாதென்று லஞ்சம், சாதிய பாகுபாடு, பல்வேறு வகை டார்ச்சர்கள். இதையெல்லாம் பயிற்சி காவலர்கள் பொறுத்துக் கொண்டும், போராடியும் கடந்து வருவதுதான் கதை. எம்.எஸ்.பாஸ்கர், லால் தங்களுக்கான கதாப்பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்துள்ளனர்.

விக்ரம் பிரபு முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் சிறிது வித்தியாசம் காட்டியுள்ளது அவரது முன்னேற்றத்தை காட்டுகிறது. விருவிருப்பாக அரசியல் பேசும் கதையில் தேவையில்லாமல் சில காதல் காட்சிகளும், பாடல்களும் வருவது பொறுமையை சோதிப்பதாக உள்ளது. அறிவழகன், ஈஸ்வர மூர்த்தி இடையே நடக்கும் பரேட் மோதல்கள் விருவிருப்பின் உச்சம். விக்ரம் பிரபுவுக்கு நெடுநாட்கள் கழித்து சிறப்பான படமாக அமைந்துள்ளது டாணாக்காரன்.

பீஸ்ட் காப்பியா..இல்லையா..? பாத்து  தெரிஞ்சிக்கோங்க! – நெல்சன் நெத்தியடி பதில்!

பீஸ்ட் திரைப்படம் வேறு ஒரு படத்தின் காப்பி என பரப்பப்படும் தகவல்களுக்கு இயக்குனர் நெல்சன் பதிலளித்துள்ளார்.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் முன்பதிவுகள் முழுவதும் முடிந்துள்ளது. ரசிகர்கள் பீஸ்ட் ரிலீஸை முன்னிட்டு பேனர்கள், போஸ்டர்கள் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அதேசமயம் பீஸ்ட் திரைப்படம் ஏற்கனவே தமிழில் வெளியான குர்கா படத்தின் காப்பி என்றும், பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிம்பிளாக விளக்கமளித்துள்ள இயக்குனர் நெல்சன் “ஷாப்பிங் மாலை ஹைஜேக் செய்யும் கதை ஏற்கனவே நிறைய வந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சொல்லப்படும் விதம், காட்சிகளில் அவை மாறுபடும். இந்த மாதிரியான படங்களில் ஒரே மாதிரியான காட்சிகள் வருவதை தவிர்க்க முடியாது. கூர்கா படத்தை பார்த்தேன் அதற்கு, இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. படம் வெளியானதும் மக்களுக்கே காப்பியா இல்லையா என்று தெரியும்” என்று கூறியுள்ளார்.

போன பார்ட் அளவுக்கு இல்ல..! வேற லெவலா இருக்கு! – Fantastic Beast விமர்சனம்!

ஹாலிவுட்டின் பிரபல மாயாஜால படமான ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே இருவேறு கருத்துகளையும் பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜே.கே.ரோலிங். இவரது ஹாரி பாட்டர் கதைகள் படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நிலையில் அதன் முன்கதையாக உருவாக்கப்பட்டு வெளியாகி வருகிறது பெண்டாஸ்டிக் பீஸ்ட் பாகங்கள்.

முன்னதாக வெளியான இரண்டு பாகங்களில் ஆல்பஸ் டம்பிள்டோர், கிரிண்டல்வால்ட் இடையே உள்ள ரத்த ஒப்பந்தம் குறுத்தும், இந்த விவகாரத்தில் மாய விலங்குகளை பாதுகாக்கும் நியூட் ஸ்கமாண்டர் உதவுவதும் விளக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் – டம்பிள்டோரின் ரகசியங்கள் பாகம் வெளியாகியுள்ளது.

இந்த பாகத்தில் கிரிஸ்டல்வால்டுடனான ரத்த ஒப்பந்தம் முறிந்து டம்பிள்டோர், உலகின் மிகப்பெரும் மந்திரவாதியான கிரிண்டல்வால்டை வீழ்த்துவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயமாந்திரீக அமைச்சகத்தால் கிரிண்டல்வால்டின் குற்றங்களை நிரூபிக்கமுடியாமல் போக விடுதலையாகும் கிரிண்டல்வால்ட் அமைச்சகத்தில் தலைமை பதவிக்கே போட்டியிடுகிறான்.

எதிர்காலத்தை கிரிண்டல்வால்டால் பார்க்க முடியும் என்பதால் ஸ்காமண்டர் உள்பட்ட குழுவை அமைத்து திட்டமிடாமலே கிரிண்டல்வால்டை எதிர்க்கிறார் டம்பிள்டோர். மாய அமைச்சக தேர்தலில் கிரிண்டல்வால்ட் ஜெயித்தானா அல்லது அவனை ஸ்கமாண்டர் குழு வீழ்த்தியதா என்பது விருவிருப்பான கதை.

ஆனால் சிறிய அளவிலான கதையை நீண்ட நேரம் இழுத்திருப்பது போன்ற திரைக்கதை அயற்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படங்களின் சிறப்பம்சமே அதில் வரும் வித்தியாச வித்தியாசமான மாய விலங்குகள்தான். ஆனால் இந்த படத்தில் மாய விலங்குகளுக்கான பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் மாயாஜால உலகை குழந்தைகளுடன் சென்று கண்டுகளிக்க ஏற்ற படமாக ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் – டம்பிள்டோரின் ரகசியங்கள் இருக்கும்.

தனுஷ் பட நடிகை வீட்டில் நகைகள் கொள்ளை! – மொத்த மதிப்பு இவ்வளவா?

தனுஷுடன் “அம்பிகாபதி” படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sonam Kapoor with her Husband

இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சோனம் கபூர். இந்தியில் பிரபல நடிகரான அணில் கபூரின் மகளான இவர் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தனுஷுடன் “அம்பிகாபதி” என்ற படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் திருமணமான சோனம் கபூர் நடிப்பத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். தற்போது அவர் கர்ப்பமாகவும் உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் கோடிக்கணக்கில் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதியே நகைகள் திருடுபோனது தெரியவந்தாலும், பிப்ரவரி 23ம் தேதி அன்றே புகார் அளிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார் இந்தியா முழுவதும் 9 பேரை கைது செய்துள்ளனர். தற்பொது சோனம்கபூர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2.4 கோடி என தெரிய வந்துள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பீஸ்ட் முன்பதிவு மும்முரம்..! – இவ்வளவு வசூலா..?

விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு அமெரிக்காவில் மும்முரமாக முன்பதிவு நடந்து வருகிறது.

Beast Tamil Movie

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியாகும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் பீஸ்ட் படத்திற்கு ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. முன்பதிவில் மட்டும் இதுவரை அமெரிக்காவில் 3.20 லட்சம் டாலர்கள் வசூலாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பீஸ்ட்டின் முதல் நாள் வசூலே உலகம் முழுவதிலும் மொத்தமாக 100 கோடியை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 வருஷத்துக்கு ஆஸ்கர் நினைப்பே கூடாது..! – வில் ஸ்மித்திற்கு தண்டனை!

ஆஸ்கர் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டின் மிக பிரபலமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் “கிங் ரிச்சர்ட்ஸ்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெற்றார். ஆஸ்கர் விருது விழாவினை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் க்றிஸ் ராக் நகைச்சுவையாக வில் ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்ய ஆத்திரமடைந்த வில் ஸ்மித் அவரை மேடையிலேயே அறைந்தார்.

இந்த சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வில் ஸ்மித்தின் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கூடி ஆலோசித்த ஆஸ்கர் விழா கமிட்டியினர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் ஆஸ்கரில் தடை விதித்துள்ளனர். இதனால் வில் ஸ்மித்தின் அடுத்தடுத்த படங்கள் ஆஸ்கருக்கு தேர்வாகாது என்பதால் வில் ஸ்மித்தை நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.