Connect with us

ஹீரோவையே இனிமேதான் செலக்ட் பண்ணனும்… படக்குழுவை நடுத்தெருவில் நிறுத்திய பாரதிராஜா!. ஓவர் கான்ஃபிடெண்டில் செய்த வேலை..

bharathiraja

Cinema History

ஹீரோவையே இனிமேதான் செலக்ட் பண்ணனும்… படக்குழுவை நடுத்தெருவில் நிறுத்திய பாரதிராஜா!. ஓவர் கான்ஃபிடெண்டில் செய்த வேலை..

Social Media Bar

Director Bharathi Raja : தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் என இப்போது வரை அழைப்படுபவர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பக்கட்டம் முதலே அதிக வரவேற்பு இருந்தது. எனவே அப்போதே துணிந்து தமிழ் சினிமாவில் வராத பல கதைகளை படமாக்கினார்.

இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஒருமுறை கூறியுள்ளார். பாரதிராஜா திரைப்படத்தில் உருவான திரைப்படம் மண்வாசனை. இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரையுமே புது முகங்களாக இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார் பாரதிராஜா.

அப்போதுதான் சாலையில் பள்ளிக்கு போகும் ஒரு பெண்ணை பார்த்தார். அந்த பெண் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்தார் பாரதிராஜா. அதுதான் நடிகை ரேவதி. ஆனால் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு மட்டும் அதற்கு உகந்த முகம் பாரதிராஜாவிற்கு கிடைக்கவே இல்லை.

அவரும் பொறுத்து பொறுத்து பார்த்தார். பிறகு சரி படப்பிடிப்பு செய்யும் கிராமத்தில் யாராவது கிடைக்கிறார்களா பார்ப்போம் என மொத்த குழுவையும் அழைத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் ஹீரோ இல்லாமல் இப்படி படம் எடுக்க முடியும். எனவே மொத்த குழுவும் குழப்பத்தில் இருந்துள்ளது.

அப்போது ஒரு இளைஞன் அந்த கூட்டத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்தான். அதுதான் நடிகர் பாண்டியன். பாண்டியனுக்கு பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில் பாண்டியனை பார்த்த பாரதிராஜா இவந்தான் நம் படத்தின் கதாநாயகன் என்று முடிவு செய்தார்.

அதனையடுத்து அந்த படத்தில் பாண்டியனை நடிக்க வைத்தார் பாரதிராஜா. இந்த நிகழ்வை அவர் ஈஸ்வரன் படப்பிடிப்பின்போது கூறியதாக நடிகர் முனிஸ்காந்த் பகிர்ந்துள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top