ஆயிஷாவை அழ வைத்த ஜனனி – தினமும் அழுகையாகவே போகுது நம்ம ஆயிஷாவுக்கு

தற்சமயம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. வழக்கம்போல இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வருகிறார். எப்போதுமே பிக் பாஸ் தொடருக்கென்று தனி ரசிக பட்டாளம் உண்டு.

தற்சமயம் நடக்கும் பிக்பாஸ் 6 ஆவது சீசனில் இலங்கையில் இருந்து வந்துள்ள ஜனனி என்கிற பெண்ணுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் தொடர் துவங்கியது முதலே அதில் இடம்பெற்றுள்ள ஆயிஷா என்கிற பெண்ணுக்கு முதல் எபிசோடில் இருந்தே யார் கூடவாவது பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

தற்சமயம் ஜனனிக்கும் ஆயிஷாவிற்கும் தகராறு ஏற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி ஆயிஷாவை ஏதோ கேட்க அதற்கு ஆயிஷா மிகவும் கோபமாகி பிறகு அழுவதை பார்க்க முடிகிறது. இன்றைய எபிசோடில் இதன் முழு விவரம் தெரியும்.