தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இன்னமும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே அவற்றை பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே ரஜினிகாந்துக்கு அரசியல் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது தொடர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தாலும் கூட ஒவ்வொரு முறையும் முடிவெடுத்து விட்டு பிறகு பின் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.
சில வருடங்களுக்கு முன்பு கூட கட்சி ஆரம்பிப்பதாக கூறிவிட்டு இறுதியாக ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய போஸ் வெங்கட் கூறும் பொழுது நான் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே பேட்டிகளில் கூறும் பொழுது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று தான் கூறியிருக்கிறேன்.
ஏனெனில் ரஜினிகாந்தின் மனசுக்கு அவரால் அரசியலுக்கு வர முடியாது அரசியல் பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு விஷயம் கூறுவார். அரசியல் என்பது மலத்தின் மேல் நடப்பது மாதிரி அதில் நிறைய அவதூறான பேச்சுக்கள் இருக்கும் அவற்றையெல்லாம் நாம் கண்டு கொண்டால் நம்மால் நல்லது செய்ய முடியாது என்று கூறுவார் என்று கூறியிருக்கிறார் போஸ் வெங்கட்.