கோடி ரூபாய்காக என் ரசிகர்களை ஏமாற்ற முடியாது? – ரஜினியின் பதில்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் முக்கியமானவர். அவர் நடித்த படங்களில் பல படங்கள் தமிழில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன.

அவர் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கி 2007 ஆம் ஆண்டு வந்த படம் சிவாஜி. இந்த படத்தை ஏ.வி.எம் நிறுவனம் இயக்கியது. ஸ்ரேயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நான் வெள்ளையாகி காட்டுறேன் என ஸ்ரேயாவிற்கு சவால் விட்டுவிட்டு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார். ஒரு செண்ட் நிறுவனம் அதில் இருந்து ஒரு காட்சியை தனது செண்ட் விளம்பரத்திற்காக கேட்டது.

அதற்காக அவர்கள் 1 கோடி ரூபாயை ரஜினிக்கு தர இருந்தனர். ஆனால் ரஜினி அதை மறுத்துவிட்டார். இப்போது அந்த விளம்பரத்தில் நான் நடித்தால் நான் அந்த பொருளை பயன்படுத்துகிறேன் என எண்ணி எனது ரசிகர்கள் அதை வாங்குவார்கள். அவரகளை நான் ஏமாற்ற முடியாது எனக் கூறி மறுத்துவிட்டாராம்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்ற ரஜினிகாந்த் அதற்கு பின்னரும் கூட எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

Refresh