தனது 30 வது வருட விழாவை கோலாகலமாக கொண்டாட இருக்கும் கார்ட்டூன் நெட்வொர்க் –  யூ ட்யூப்பில் நான்ஸ்டாப் லைவாம்

90ஸில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் நாஸ்டாலிஜிக்கலாக இருக்கும் சில விஷயங்களில் கார்ட்டூன் நெட்வொர்க்கும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

அந்த காலத்தில் கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகிய ஸ்கூபி டூ, பாப்பாய், பென் 10 என பல தொடர்களும் நமது பால்ய வாழ்வில் நினைவுகளாக நிற்கின்றன.

வெற்றிக்கரமாக கார்ட்டூன் நெட்வொர்க் அதன் 30 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது. எனவே இந்த 30 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக பல விஷயங்களை கார்ட்டூன் நெட்வொர்க் செய்து வருகிறது. அந்த வகையில் ஓவர் த கார்டன் வால் என்கிற அனிமேஷன் ஷோவை தொடர்ந்து அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ஒளிபரப்ப உள்ளது.

இந்த நிகழ்ச்சி கார்ட்டூன் நெட்வொர்க்கின் யூ ட்யூப் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Refresh